தவெக தலைவர் திரு.விஜய் அவர்கள் பேச்சு.

தவெக தலைவர் திரு.விஜய் அவர்கள் பேச்சு.

22.12.2025

இது ஒரு அன்பான தருணம்;அழகான தருணம். அன்பும் கருணையும்தானே எல்லாத்துக்கும் அடிப்படை. இது இரண்டுமே இருக்குற மனசுதானே தாய் மனசு. நம்ம தமிழ்நாட்டு மண்ணும் அப்படிப்பட்ட ஒரு மண்ணுதானே;தாயன்பு கொண்ட மண்ணுதானே.

ஒரு தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒண்ணுதானே. அதனால பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ்னு, இந்த மாதிரி எல்லா பண்டிகைகளும் எல்லோரும் சந்தோசமா share பண்ணிக்கிற ஊருதானே நம்ம ஊரு.

 

இங்கு வாழ்க்கை முறையும், வழிபாட்டு முறையும் வேறு வேறென்றாலும்;நாம எல்லோரும் சகோதரர்கள்தானே. அதனால்தான், நாம அரசியலுக்கு வந்ததுக்கு அப்புறம், கடவுள் நம்பிக்கை உண்டுன்னு அறிவித்தது ஏன் தெரியுமா?

உண்மையான நம்பிக்கைதான் நல்லிணக்கத்தை விதைக்கும். மற்றவர்களின் நம்பிக்கையை மதிக்க சொல்லித்தரும். அப்படிப்பட்ட நம்பிக்கை இருந்தாலே போதும், எப்பேர்பட்ட பிரச்சனைகளையும் ஜெயிக்கும்.

 

அதுமட்டுமில்ல, அப்படிப்பட்ட நம்பிக்கையோட வலிமையை பற்றி சொல்றதுக்கு பைபிளில் நிறைய கதைகள் இருக்கு. ஒன்றை பற்றி சொல்ல வேண்டும் என்றால்;

 

ஒரு இளைஞனுக்கு எதிரா தனது சொந்த சகோதரர்களே பொறாமைப்பட்டு, அவனை பாழுங்கிணற்றில் தள்ளிவிட்டு, அதிலிருந்து அவன் மீண்டு வந்து நாட்டுக்கே அரசனாகி., தனக்கு துரோகம் செய்த சகோதரர்களை மட்டுமில்ல நாட்டையே எப்படி காப்பாற்றுனாருன்னு கதைகள் பைபிளில் இருக்கு.

 

அந்த குறிப்பிட்ட கதை யாரைப்பற்றிய கதைன்னு நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லைன்னு நினைக்கிறேன். அது உங்களுக்கு நல்லா தெரியும். இப்படிப்பட்ட கதைகள் எல்லாம் எதை உணர்த்துகிறது என்றால், கடவுள் அருளும், மக்களை மானசீகமாக நேசிக்கிற அந்த அன்பும், அதீத வலிமையும், அதுக்கான உழைப்பும் இருந்தாலே போதும்; எவ்வளவு பெரிய எதிரிகளையும் ஜெயிக்கலாம்.

 

இந்த விழாவில் நான் உறுதி ஒன்றைக் கொடுக்கிறேன்;நாமும், தவெகவும் சமூக சமய நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் 100% உறுதியாக இருப்போம். அதில் எந்த விதமான காம்பிரமைஸும் இருக்காது. அதற்காகத் தான் கொள்கைகளுக்கு மதச்சார்பற்ற சமூகநீதி என்று பேரு வைத்ததே இந்த உறுதியால்தான்.

கண்டிப்பாக ஒரு ஒளி ஒன்று பிறக்கும், அந்த ஒளி நம்மை வழிநடத்தும். இங்கு வந்திருக்கும் அருளாளர்கள், அன்பர்கள் அனைவருக்கும் என்னுடைய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். அனைத்துப் புகழும் எல்லாம்வல்ல இறைவனுக்கே,

News by Rahul Ramesh India

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *