21டிசம்பர் 2025 | பத்து கேவ்ஸ் சிலாங்கூர்
மாநில சிறுவர் அணியின் வளர்ச்சி மற்றும் PDFA தமிழ் பள்ளி கால்பந்து போட்டியின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து நேற்று பத்து கேவ்ஸில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் PDFA தலைவர் திரு. சாராஸ் குமார் தலைமையில், டத்துக் M . சிவகுமார் (DSK) உடன் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. கூட்டத்தின் போது, செலாங்கூர் சிறுவர் அணியின் தற்போதைய முன்னேற்றம், திறன் வளர்ப்பு, பயிற்சி கட்டமைப்பு மற்றும் நீண்டகால வளர்ச்சி திட்டங்கள் குறித்து ஆழமான விவாதம் நடத்தப்பட்டது.
அதேபோல், PDFA தமிழ் பள்ளி கால்பந்து போட்டி எதிர்காலத்தில் எவ்வாறு மேலும் வலுப்படுத்தப்படலாம், பள்ளி மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் மாநில அளவில் திறமையான இளம் வீரர்களை உருவாக்கும் நோக்கில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது.
இந்த கூட்டம், தமிழ் பள்ளி மாணவர்களின் விளையாட்டு வளர்ச்சிக்கு புதிய திசையை வழங்கும் வகையில் அமைந்ததாக இரு தரப்பினரும் தெரிவித்தனர். இளம் தலைமுறையின் விளையாட்டு திறன்களை மேம்படுத்தி, மாநில மற்றும் தேசிய அளவிலான சாதனையாளர்களை உருவாக்குவதே முக்கிய இலக்காகக் குறிப்பிடப்பட்டது.
இந்த பயனுள்ள சந்திப்பு, எதிர்காலத்தில் PDFA சார்பில் மேற்கொள்ளப்பட உள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.















