மலேசிய சைவ நற்பணிக்கழகம் ஏற்பாடு செய்த “பெரியபுராண விழா – 2025

 

தேதி : 08 டிசம்பர் 2025

மலேசிய சைவ நற்பணிக்கழகம் ஏற்பாடு செய்த “பெரியபுராண விழா – 7.12 2025” ஆன்மிக உற்சாகத்துடன் சிறப்பாக நடைபெற்றது. சேக்கிழார் அருளிய பெரியபுராணத்தின் ஆன்மீகச் செய்திகளையும், சைவ சமயப் பண்புகளையும் புதிய தலைமுறைக்கு பரப்பும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த விழா பெரும் வரவேற்பைப் பெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மலேசிய இந்துதர்ம மாமன்றத் தலைவர் ரிஷிகுமார் வடிவேலு அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை நிகழ்த்தினார். மேலும் Prof Datuk Dr. N. S. Rajendran மற்றும் ஐயா காளியாண சுந்தரம் ஆகியோரும் இணைந்து கலந்து கொண்டது விழாவின் சிறப்பினை உயர்த்தியது.

நாயன்மார்களின் பக்தி வரலாறு, சைவ சமயப் பெருமை, பண்பாட்டு மரபுகள் ஆகியவை ஊட்டிய விழா, மலேசியத் தமிழ்ச் சைவர்கள் ஒன்றிணைந்து நடத்திய ஒற்றுமை நிகழ்வாக அமைந்தது. பெரியபுராணத்தின் மதிப்பும் மகத்துவமும் சமூகத்துக்கு எடுத்துச் சொல்லப்படும் முக்கிய தருணமாக இது அமைந்தது.

விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்த சிவதிரு தர்மலிங்கம் நடராசன் ஐயா மற்றும் மலேசிய சைவ நற்பணிக்கழக நிர்வாகத்தினருக்கு பல தரப்பினரிடமிருந்து பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன.

இவ்விழாவை நினைவுகூர்ந்து, ரிஷிகுமார் வடிவேலு அவர்கள்,

“செல்வமலி குன்றத்தூர் சேக்கிழார் அடி போற்றி… திருச்சிற்றம்பலம்”

என்று தனது மரியாதை நன்றியை தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *