Air Asia X-ன் வருவாய் 4 மடங்காக உயர்வு கண்டுள்ளது
செப்பாங் டிச 2
உலகின் தலைசிறந்த மலிவு கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா எக்ஸின் வருவாய் 4 மடங்காக உயர்வு கண்டுள்ளது.
ஏர் ஆசியா எக்ஸ் தொடர்ந்து இலாபத்தை பேணி, வெ27.8 மில்லியன் நிகர இலாபத்தை பதிவு செய்துள்ளது.
முந்தைய ஆண்டை விட 2025 மூன்றாம் கால் ஆண்டில் வெ3.0 மில்லியனிலிருந்து வெ12.0 பில்லியன் லாபத்தை பதிவு செய்துள்ளது.
ஏர் ஆசியா எக்ஸின் 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான தணிக்கையற்ற நிதி முடிவுகள் இந்த தகவலை வெளிப்படுத்தி உள்ளது.
இந்த காலாண்டில் ஏர் ஆசியா எக்ஸ் வெ803.5 மில்லியன் வருவாய் பெற்றுள்ளது(3Q24-இன் வெ795.0 மில்லியனுடன் ஒப்பிடுகையில் சிறிய உயர்வு).
கடந்த ஆண்டை(84 %) விட பயணிகள் ஏற்றளவு 82 % என்ற போதிலும் நிலையான செயல் திறன் தான் என்று கூறலாம்.
தூரமான வழித்தடங்களில் கவனம் செலுத்தும் நெட்வொர்க் மாற்றம் காரணமாக பயணிகள் ஏற்றளவு 5% குறைந்தாலும், வருவாயில் ஏற்றம் கண்டுள்ளது.
சீனா மற்றும் ஜப்பான் வழித்தடங்கள் தொடர்ந்து வலுவான தேவையால், நிறுவனத்தின் வருவாய் அதிகரித்துள்ளது.
மேலும் எரி பொருள் விலை குறைவு மற்றும் ரிங்கிட் மதிப்பு அதிகரிப்பு காரணமாக செலவினங்கள் குறைந்துள்ளன.
இதனால் வரிப் பிறகான வெ27.8 மில்லியன் பதிவு செய்துள்ளது.
எதிர் வரும் 4Q25-ல் Sendai, Almaty,Riyadh ஆகி புதிய வழித்தடங்கள் தொடர்ந்து வலுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏர் ஆசியா எக்ஸ் மொத்தம் 19 A330 ரக விமானங்களை செயல்பாட்டில் கொண்டிருக்கிறது.
இதனிடையே இந்த காலாண்டின் பயணிகள் ஏற்றளவு(PLF) மற்றும் வருவாய் செயல்திறன் ஏர் ஆசியா எக்ஸின் வலுவான நெட்வொர்க் தந்திரத்தை உணர்த்துவதாக ஏர் ஆசியா எக்ஸ் தலைமை செயல்முறை அதிகாரி பென்யாமின் இஸ்மாயில் கூறினார்.
தாஷ்காண்ட் மற்றும் துருக்கியின் இஸ்தான்புல் புதிய வழித்தடங்கள் நெட்வொர்க்கை விரிவுபடுத்தும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
‘அன்சிலரி வருவாய் மற்றும் செலவு கட்டுப்பாடு’ எங்களின் வலிமை என அவர் சுட்டிக் காட்டினார்.
‘AAGL மற்றும் AirAsia Berhad’ இணைப்பு உலகின் முதல் குறைந்த கட்டண நெட்வொர்க் கேரியரை உருவாக்கும் வலியை திறக்கிறது என அவர் சொன்னார்.
















