சபா மாநிலத் தேர்தல்; 53 விசாரணை அறிக்கைகள் திறப்பு- போலீஸ்

கோத்தா கினாபாலு, நவ 25-
சபா மாநிலத் தேர்தல் பரப்புரைக் காலம் நவம்பர் 15ஆம் திகதி தொடங்கியதில் இருந்து பெறப்பட்ட 85 முறைப்பாடுகளில், 53 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதில் சமூக ஊடகங்களைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் சுவரொட்டிகள், கொடிகள் மற்றும் பிற பரப்புரைப் பொருட்களைச் சேதப்படுத்தும் நடவடிக்கை தொடர்பான பல வழக்குகளும் அடங்கும் என்று சபா மாநிலப் காவல்துறை ஆணையர் ஜவுதேஹ் டிகுன் அவர்கள் கூறினார்.
அனைத்துத் தேர்தல் பரப்புரை ஊழியர்களுக்கும் 7,288 பரப்புரை அனுமதிச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், சனிக்கிழமை நடைபெறவுள்ள வாக்குப்பதிவு தினத்தன்று சபா முழுவதும் 12,000க்கும் அதிகமான காவல்துறை அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.















