வணக்கம்…
22.11.2025

மலாயா கணபதி (வாழ்வும் போராட்டமும்) நூல் வெளியீடுக்கின்னும் இருதினங்களே உள்ளது.
நாட்டில் நமக்கான உரிமைக்காகப் போராடிய நம் முன்னோர்களை இன்றைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்கும் இம்முயற்சிக்கு அனைவரது ஆதரவும் அவசியமாகிறது.
இந்நாட்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடி பல இன்னல்களுக்கு ஆளாகி தோட்டத் தொழிலாளர் உரிமைகளை மீட்டதோடு நமக்கான வாழ்வியல் அடையாளங்களையும் மெய்பித்த மலாயா கணபதி,பி.வீரசேனன் உட்பட எண்ணற்ற தொழிற்சங்கவாதிகளையும் போராட்டவாதிகளையும் நினைவுக்கூறும் இந்நூல் வெளியீடு; வெறும் நூல் வெளியீடு மட்டுமில்லை.மாறாய்,நம் வரலாற்றை அடுத்த தலைமுறையிடன் கொண்டு சேர்க்கும் பெரும் கடமை.
வருகின்ற காரிக்கிழமை (சனி) 22.11.2025இல் மதியம் 2.45க்கு சிரம்பான் லோரோங் ஜாவா தமிழ்ப்பள்ளியில் நடைபெறும் மலாயா கணபதி (வாழ்வும் போராட்டமும்) நூல் வெளியீடு திரளாக கலந்து ஆதரவு அளிக்குமாறு அன்போடு விழைகிறேன்.
வரலாற்றை அறிந்து கொள்ள நூல் வெளியீடு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ஆர்வலர்கள் தங்களின் நண்பர்களையும் தெரிந்தவர்களையும் உடன் அழைத்து வருமாறு பணிவோடு கேட்டு கொள்கிறேன்.
நன்றி
*சிவாலெனின்*















