கே.ஆர்.கே. கேடி பிரதர்ஸ் புரொடக்சன்ஸ் (KRK KD BROTHER’S PRODUCTION) ஏற்பாட்டில் மூன்றாவது முறையாக டிக் டாக் (TIKTOK) சமூக வலைத்தளத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் நடத்தப்பட்ட பாடல் திறன் போட்டியின் பரிசளிப்பு விழா 1.11.2025 அன்று, ஜோகூர் பாரு புக்கிட் இண்டாவில் உள்ள லூன் சிங் (Restaurant Loon Sing Bukit Indah JB) உணவகத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள VIP 2 அறையில் மிகவும் சிறப்பாகவும் விமர்சையாகவும் நடைபெற்றது.

(ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள்: சிவக்குமார் சு, காளிதாசன் – சுபா, யோகநாதன், நெல்சன் இலக்சாண்டர், சத்தியசீலன் – மாலா, ஹரிதரன்,அப்பு @ லிவர்சன் தேவேந்திரன் மற்றும் அன்பு சகோதரிகள் துனிதா ரேக்கு & அனிதா ரேக்கு, குமுதம் மாரியப்பன் & தனலட்சுமி மாரியப்பன்.)
இந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தொழிலதிபரும் (MIWA- MASAI INDIAN WELFARE ASSOCIATION) (மீவா) எனப்படும் மாசாய் இந்திய நலவாரிய சங்கத்தின் நிறுவனரும் தலைவருமான அம்பாசிடர் யாங் ஹோர்மாட் (Ambassador Yang Hormat) டத்தோ டாக்டர் K. புருஷோத்தமன் அவர்களும்,
ஜி.கே. புரொடக்சன்ஸ் நிறுவனர் திரு.ஜி. குமார் அவர்களும் அவரது துணைவியார் திருமதி நிர்மலா தேவி கிருஷ்ணன்,
RAG’S STAR MEDIA GLOBAL நிறுவனர் நாட்டியச் சுடர்,நாட்டிய அரசி,நாட்டிய கலா ரத்னா டாக்டர் எம்.ராகவி பவனேஸ்வரி அவர்களும்,
RPS TOOL TECH நிறுவனர் சமூக சேவகி,கலைமாமணி, திரு.திருமதி.ஷாலு பிள்ளை ரவீந்திரன் அவர்களும்,
BLUE TIGER அன்பு உள்ளங்கள் JB சமூக சேவகன் திரு.ஷரன் @ சரவணன் ரத்ன சாமி அவர்களும் கலந்துக் கொண்டனர்.
கே.ஆர்.கே. கேடி பிரதர்ஸ் புரொடக்சன்ஸ் பாடல் திறன் போட்டி 3.0 சாம்பியன் கோலாலம்பூரை சேர்ந்த கார்த்திகேயன் ராஜமாணிக்கம் அவருக்கு பரிசுத்தொகை ரிங்கிட் மலேசியா 1000 வெள்ளியை RPS TOOL TECH திருமதி.ஷாலு பிள்ளை ரவீந்திரன் வழங்கினார்.
முதல்நிலை வெற்றியாளர் பினாங்கு மாநிலத்தின் செலீன் ஜெசிக்காவுக்கு பரிசுத்தொகை ரிங்கிட் மலேசியா 700 வெள்ளியை BLUE TIGER அன்பு உள்ளங்கள் JB திரு.ஷரன் @ சரவணன் ரத்ன சாமி அவர்கள் வழங்கினார்.
இரண்டாம்நிலை வெற்றியாளர் ஜோகூர் பாருவின் ஜெயபிரகாஷ் ஜெயபாலுக்கு பரிசுத்தொகை ரிங்கிட் மலேசியா 500 வெள்ளியை RAG’S STAR MEDIA GLOBAL டாக்டர் எம்.ராகவி பவனேஸ்வரி அவர்கள் வழங்கினார்.
இப்போட்டியில் மக்கள் தேர்வாகவும்,கே.ஆர்.கே கேடி பிரதர்ஸ் புரொடக்சன்ஸின் மின்னும் நட்சத்திரம், சிறந்த தருணங்களை உருவாக்கியவராக தேர்வான சிலாங்கூர் கிள்ளானை சேர்ந்த கோமதி கிருஷ்ணனுக்கு பரிசுத்தொகை ரிங்கிட் மலேசியா 400 வெள்ளியை சிங்கப்பூர் தாளங்கள் புரொடக்சன்ஸ் நிறு















