தேதி: 12 நவம்பர் 2025

பூச்சி ரவியின் “உறவுகள்…” – உணர்வுகளைப் பேசும் இதயநெகிழ் மேடைநாடகம்
குடும்ப பாசம், மனித உறவுகள், பிரிவு, காதல் போன்ற வாழ்க்கையின் பல பரிமாணங்களை நெகிழ்ச்சியோடு வெளிப்படுத்தும் புதிய மேடைநாடகமாக “உறவுகள்…” விரைவில் மேடையேறவுள்ளது.

இந்த நாடகத்தின் கதை, வசனம் மற்றும் இயக்கம் ஆகிய அனைத்தையும் பிரபல நாடக இயக்குநர் பூச்சி ரவி மேற்கொண்டு உள்ளார். அவருக்கு துணையாக ரோபர்ட் உதவி இயக்குநராக பணியாற்றுகிறார்.
இந்த மனதை நெகிழ்விக்கும் படைப்பை எஸ்.பி. மணிவாசகம் தயாரிக்க, கரு. பன்னீர்செல்வம் நிர்வாகத் தயாரிப்பாளராக இணைந்துள்ளார். நாடகத்திற்கான ஆலோசகராக பாஸ்கி பணியாற்றுகிறார்.
மனித வாழ்க்கையின் உண்மையான உணர்வுகளை மேடையில் பிரதிபலிக்கவிருக்கும் இந்த நாடகம் PERKEMAS மற்றும் NLFCS ஆகிய அமைப்புகளால் பெருமையுடன் வழங்கப்படுகிறது.
“உறவுகள்…” – ஒரு சாதாரண நாடகம் அல்ல, இதயத்தைத் தொட்டுப் பேசும் உறவுகளின் கதை!















