- வரும் 16ஆம் பொதுத் தேர்தலில் 8 நாடாளுமன்ற, 12 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் பிபிபி — டத்தோ டாக்டர் லோகா பாலா மோகன்

கோலாலம்பூர்: 9.12.2025
பீப்பிள்ஸ் ப்ரோக்ரெசிவ் பார்டி (PPP) வரும் 16ஆம் பொதுத் தேர்தலில் (GE16) 8 நாடாளுமன்ற மற்றும் 12 மாநில சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகக் கட்சித் தலைவர் டத்தோ டாக்டர் லோகா பாலா மோகன் அறிவித்தார்.
கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற பிபிபி தீபாவளி திறந்தவீட்டு நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கட்சியின் உறுப்பினர் எண்ணிக்கை நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவித்தார்.
> “புதிய உறுப்பினர்கள் இணைந்ததன் மூலம், பிபிபியின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை தற்போது 1,30,000 பேராக உயர்ந்துள்ளது,” என்று அவர் கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
> “இது மக்களின் பிபிபி கொள்கைகள் மற்றும் செயற்பாடுகளின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அதே சமயம், 20% புதிய உறுப்பினர்கள் இணைந்திருப்பது கட்சியை மேலும் வலுப்படுத்தியுள்ளது,” என்றார்.
மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதிலும், சேவைகளை மேலும் பல மலேசியர்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் கட்சி முழு உறுதிப்பாட்டுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
> “மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது எங்கள் முக்கிய இலக்காகும். இதன் அடிப்படையில், வரும் பொதுத் தேர்தலில் 8 நாடாளுமன்ற மற்றும் 12 மாநில சட்டமன்ற தொகுதிகளில் பிபிபி போட்டியிடும்,” என்று டத்தோ டாக்டர் லோகா பாலா தெரிவித்தார்.















