நவம்பர் 1, 2025 | சுங்கை ஊஜோங்
நவம்பர் 1, 2025 | சுங்கை ஊஜோங்ரோயல் கிளப் சுங்கை ஊஜோங் – தீபாவளி நைட் & டான்ஸ் விழா சிறப்பாக நடைபெற்றதுஇந்த ஒளியின் திருநாளான தீபாவளியை முன்னிட்டு “தீபாவளி நைட் & டான்ஸ்” எனும் சிறப்புவிழா பெரும் உற்சாகத்துடன் நடைபெற்றது.

இவ்விழாவில் கிளப் தலைவர் டத்தோ லக்ஷ்மி காண்டன் அவர்கள் தலைமை வகித்தார். உணவு மற்றும் பானப் பிரிவு தலைவி திருமதி Dr கவிதா சுப்ரமணியம் அவர்கள் தன்னுடைய அன்பான வழிகாட்டுதலின் கீழ், பொது குழு உறுப்பினர்கள் இணைந்து விழாவை சிறப்பாக ஒருங்கிணைத்தனர்.
இந்நிகழ்வில் உறுப்பினர்கள், குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்கள் பெருமளவில் கலந்து கொண்டு, தீபத்தின் ஒளி இருளை வெல்லும் வெற்றியின் சின்னமாக ஒன்றிணைந்து கொண்டாடினர்.
பாரம்பரிய நடனங்கள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வகை தீபாவளி விருந்து உணவுகள் கலந்து கொண்ட அனைவருக்கும் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் வழங்கின.
ரோயல் கிளப் சார்பில் அனைத்து உறுப்பினர்கள், குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுக்கும் மனமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது. அனைவரின் பங்களிப்பாலும் இவ்விழா மிகுந்த வெற்றியுடன் நிறைவு பெற்றது.இது உண்மையில் ஒரு மறக்க முடியாத இரவு — சிரிப்பு, இசை, நடனம் மற்றும் தீபத்தின் ஒளி நிறைந்த நிறைந் ஒரு உற்சவம்!















