பிராந்திய அமைதிக்கான முன்னெடுப்பாக மலேசியா தொடரும்– பிரதமர் அன்வார் உறுதி
கோலாலம்பூர்: 29.10.2025

பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மலேசியா தொடர்ந்து பிராந்திய அமைதிக்கான முன்னெடுப்பாகவும், நம்பகமான சர்வதேசப் பங்காளியாகவும் செயல்படும் என்று வலியுறுத்தினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் நடத்திய சந்திப்பு பயனுள்ளதாக அமைந்தது என்றும், பிராந்திய அமைதியை உருவாக்குவதில் மலேசியாவின் பங்கை இது வலுப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காசா சமாதானத் திட்டத்தில் டிரம்பின் உறுதிப்பாட்டிற்கு நன்றி தெரிவித்த அவர், “பாலஸ்தீனம் பாதுகாப்பாக, சுதந்திரமாக, இறைமையுடன் இருக்க வேண்டும்” என்ற மலேசியாவின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தினார்.
கம்போடியா-தாய்லாந்து இடையேயான சமாதான உடன்படிக்கை மலேசியாவின் இராஜதந்திர திறனை வெளிப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். வெற்றிகரமாக நிறைவடைந்த 47-வது ஆசியான் மாநாட்டிற்கு ஒத்துழைத்த அனைத்து மலேசியர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.















