இந்தியக் கலை, பண்பாடு, இசை, நடனம், மற்றும் ஒற்றுமையை கொண்டாடும் வண்ணம் “பெஸ்டா நமஸ்தே 2025 (Pesta Namaste 2025)

கோலாலம்பூர், அக்டோபர் 24, 2025 –

இந்தியக் கலை, பண்பாடு, இசை, நடனம், மற்றும் ஒற்றுமையை கொண்டாடும் வண்ணம் “பெஸ்டா நமஸ்தே 2025 (Pesta Namaste 2025)” எனும் மிகப்பெரிய பண்பாட்டு விழா வரும் நவம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் (சனி மற்றும் ஞாயிறு) நூ சென்ட்ரல் (Nu Sentral), பிரிக்க்ஃபீல்ட்ஸ், கோலாலம்பூர் பகுதியில் நடைபெற உள்ளது.

இந்த விழா காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறவுள்ளது. இதனை Avision Training Solution Sdn. Bhd. நிறுவனத்தின் நிறுவனர் டாக்டர் யோகேஸ்வரி அவர்கள் ஏற்பாடு செய்து, துண் கோட்டா கெமூனிங் தொகுதி அலுவலகம் இணைந்து நடத்துகிறது.

இவ்விழாவில் இந்திய பாரம்பரியத்தின் பல்வகை அழகுகள் ஒரே மேடையில் வெளிப்படுத்தப்படவுள்ளன.
நிகழ்ச்சிகளில் —
பாரம்பரிய இந்திய நடனங்கள் மற்றும் பிரமாண்டமான பாலிவுட் ஆட்டங்கள்
வீணை மற்றும் வயலின் நேரடி இசை நிகழ்ச்சிகள்
பெரியவர்களுக்கான பாரம்பரிய ஆடை அணிவகுப்பு (Fashion Show)
சிறுவர் கலாச்சார விளையாட்டுகள் மற்றும் வேடிக்கையான நிகழ்வுகள்
சுவைமிகு இந்திய உணவுகள் — பாரம்பரியத்தின் நறுமணம் மிக்க விருந்து

இசை, நடனம், கலை மற்றும் உணவு என அனைத்தும் இணைந்திருக்கும் இந்த இரு நாட்கள் இந்திய கலாச்சாரத்தின் நெடுந்தொடர் மரபை நினைவூட்டும் வண்ணம் அமைந்துள்ளது.

“பேஸ்டா நமஸ்தே 2025” அனைவருக்கும் திறந்த நிகழ்வாகும். குடும்பத்தினருடன் மற்றும் நண்பர்களுடன் கலந்து கொண்டு இந்திய பாரம்பரியத்தின் அழகை அனுபவிக்க அனைவரும் வருகை தாருங்கள்!

— மலேசிய கலை உலகம் (MKU) செய்தி
24 அக்டோபர் 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *