பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் போடப்பட்டிருநத தீபாவளி தற்காலிக கடைகள் காற்றில் பறந்தன

கோலாலம்பூர்: 1 Okt 2025
கோலாலம்பூரில் கனமழையுடன் வீசிய பலத்த காற்றை தொடர்ந்து பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் போடப்பட்டிருநத தீபாவளி தற்காலிக கடைகள் காற்றில் பறந்தன. இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீபாவளியை முன்னிட்டு பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தின் பிரதான சாலையில் பிரத்தியேக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டு அங்கு கூடாரங்கள் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில் தலைநகரின் பல பகுதிகளில் இன்று காலை முதல் கனமழையுடன் கூடிய பலத்த காற்று வீசியது.
தற்காலிக கடைகள் காற்றில் பறந்த நிலையில் அதனை கோலாலம்பூர் மாநகர் மன்ற அமலாக்க பிரிவு அதிகாரிகள் அப்புறப்படுத்தினர்.
முன்னதாக, பிரிக்பீல்ட்ஸ் பிரதான சாலைகளில் போடப்பட்டிருந்த தற்காலிக தீபாவளி கடைகள் குறித்து தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் காணொளி வெளியிட்டு தனது வருதத்தைத் தெரிவித்திருந்தார்.
அதில் போடப்பட்டுள்ள தீபாவளி கடைகள் யாவும் பாதுகாப்பானதா ? பொதுமக்கள் அதிகளவில் வருவார்களா என்று கேள்விகளைத் தொடுத்திருந்தார்.















