சிலாங்கூரில் காயிஸ் ஏற்பாட்டில் 11-ஆவது ஆண்டு கல்லறை விழா

சிலாங்கூரில் காயிஸ் ஏற்பாட்டில் 11-ஆவது ஆண்டு கல்லறை விழா

சிலாங்கூரில் 28.09.2025

சலாம் செஜாதெரா, சலாம் மலேசியா மாடானி ✨

சிலாங்கூர் மாநில இந்திய சமூக நலன் மரண சகாய இயக்கம் (காயிஸ்) ஏற்பாட்டில், 11-ஆம் ஆண்டு கல்லறை விழா வரும் 05.10.2025, ஞாயிறு காலை 8.00 மணி அளவில் கிள்ளான் சிம்பாங் லீமா இடுகாட்டில் நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு, 28.09.2025, ஞாயிறு காலை 8.00 மணி அளவில் சிம்பாங் லீமா இடுகாட்டில் கல்லறைத் துப்புரவு பணி நடைபெறவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு ஒத்துழைப்பை வழங்குமாறு அன்புடன் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

“நம்மை விட்டு மறைந்த ஆத்மாக்களின் உடல்கள் அடங்கியுள்ள கல்லறையைத் தூய்மையாக வைத்திருப்பது, அவர்களுக்கு நாம் செலுத்தும் மிகப் பெரிய மரியாதை ஆகும். இது போன்ற சேவைகள் நாடெங்கும் நடைபெற வேண்டும்” என்று இயக்கத்தின் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

நன்கொடை வழங்க விரும்புவோர் BSN 10104-41-00010411-1 என்ற கணக்கில் நன்கொடை அளிக்கலாம்.

மேலும் தகவல்களுக்கு:

  • இயக்கத் தலைவர் டத்தோ ஸ்ரீ தட்சிணாமூர்த்தி – 📞 012-6700762

  • விழா தலைவர் டத்தோ ராமா – 📞 013-3104269

  • செயலாளர் டாக்டர் சுப்பையா – 📞 016-3233214

காயிஸ் கடந்த 11 ஆண்டுகளாக இச்சமூக நலச் சேவையை தொடர்ந்து செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *