மலேசிய தினத்தை முன்னிட்டு வாகனங்கள் எண்ணிக்கை உயர வாய்ப்பு: PLUS நிறுவனம் தகவல்

மலேசிய தினத்தை முன்னிட்டு வாகனங்கள் எண்ணிக்கை உயர வாய்ப்பு: PLUS நிறுவனம் தகவல்

கோலாலம்பூர்:
பள்ளி விடுமுறை மற்றும் மலேசிய தின கொண்டாட்டங்களை முன்னிட்டு, செப்டம்பர் 12, 13, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில், PLUS நெடுஞ்சாலைகளை தினமும் 2.2 மில்லியன் வாகனங்கள் பயன்படுத்தும் என PLUS மலேசியா நிறுவனம் எதிர்பார்க்கிறது.

PLUS நிறுவனம் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி, PLUS மற்றும் LPT2 நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்துவோர், PLUS செயலியில் உள்ள MyPLUS-TTA அட்டவணையைப் பயன்படுத்தி தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

“சமீபத்திய மேம்பாட்டின் மூலம், MyPLUS-TTA இனி முக்கிய நாட்களில் பயன்படுத்த முடியும். இது பண்டிகைக் காலங்கள் அல்லாத நாட்களில் நெடுஞ்சாலை பயனாளிகள் தங்கள் பயணத்தை திறம்பட திட்டமிடவும், சீரான போக்குவரத்து ஓட்டத்தை உறுதிப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது,” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் மக்கள் தங்கள் TOUCH AND GO அட்டை அல்லது E- WALLET இல் போதுமான இருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், எளிதான பயணத் திட்டமிடலுக்காக PLUS செயலியைப் பதிவிறக்கவோ அல்லது புதுப்பிக்கவோ வேண்டும் என்றும் PLUS நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

news by NOM VEERA SINNAYEN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *