வெளிநாட்டு பயணங்களுக்கு தற்காலிகத் தடை : பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

வெளிநாட்டு பயணங்களுக்கு தற்காலிகத் தடை : பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

கோலாலம்பூர்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அனைத்து அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்களின் வெளிநாட்டு பயணங்களை உடனடியாக நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த முடிவு, வரவிருக்கும் 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் 47வது ஆசியான் உச்சி மாநாடு தயார்நிலைகளில் முழு கவனம் செலுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளது.

தொடர்பு அமைச்சரும் மடானி அரசாங்கத்தின் பேச்சாளருமான டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்ததாவது, இந்த உத்தரவு உடனடியாக அமலில் வரும். ஆனால், முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட கூட்டங்கள் அல்லது அமைச்சரவை சிறப்பு அனுமதி அளித்த நிகழ்வுகள் மட்டும் விதிவிலக்காக அனுமதிக்கப்படும்.

“இது, அமைச்சர்கள் முக்கியத்துவம் வாய்ந்த சில திட்டங்களிலும், பிரதமர் அக்டோபர் 10ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ள 2026 பட்ஜெட் தயாரிப்பிலும் முழு கவனம் செலுத்தும் வகையில் எடுக்கப்பட்ட தீர்மானமாகும்,” என அவர் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

2026 பட்ஜெட், எதிர்வரும் அக்டோபர் 10ஆம் தேதி பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *