கோலாலம்பூர், 14 அக்டோபர் 2026:

1990-களின் தமிழ்த் திரைப்பட இசையில் தனக்கென ஓர் இடம்பிடித்த இந்தியப் பாடகரும் இசையமைப்பாளருமான சுரேஷ் பீட்டர்ஸ், வரும் டிசம்பர் 5-ஆம் தேதி ஜோகூர் பாருவில் நடைபெறவுள்ள ‘Legends Vibe – Live in JB’ இசை நிகழ்ச்சியில் முதன்முறையாகப் பங்கேற்கவுள்ளார்.
MNESS Productions மற்றும் BR Films இணைந்து ஏற்பாடு செய்யும் இந்நிகழ்ச்சியில், பிரபல இந்தியப் பாடகர்களான அனுராதா ஸ்ரீராம், கிரிஷ், ஆண்டனி தாசன், பிரியங்கா உள்ளிட்ட கலைஞர்களும் ஒரே மேடையில் ரசிகர்களை மகிழ்விக்கவுள்ளனர்.
MNESS Productions இயக்குநர் டாக்டர் முனீஸ்வரன் சிவநாதன் தெரிவிக்கையில், பல தலைமுறை தமிழ் இசை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பாடல்களை மீண்டும் நேரலையில் அனுபவிக்கும் வாய்ப்பாக இந்நிகழ்ச்சி அமையும் என்றார்.
ஜோகூர் பாருவில் உள்ள பாரடைக்ம் மால் மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் சுமார் 2,500 ரசிகர்களை வரவேற்க ஏற்பாட்டாளர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.
நுழைவுச்சீட்டுகள் RM99 முதல் RM499 வரை விற்பனை செய்யப்படவுள்ளன. தீபாவளிச் சிறப்புச் சலுகைகள் மற்றும் நுழைவுச்சீட்டு விவரங்கள் விரைவில் MyTicket.Asia இணையதளத்தில் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழைய நினைவுகளை மீட்டெடுத்து, இசையால் தலைமுறைகளை இணைக்கும் ‘Legends Vibe – Live in JB’ நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்!















