ஜொக்கோ (JOKKO) இசை காணொளி வெற்றிக்காக சிறப்பு பிரார்த்தனை நிகழ்வு

 

கிளாங், ஜூன் 13. 2026

வரவிருக்கும் “ஜொக்கோ (JOKKO)” இசை காணொளியின் மாபெரும் வெற்றிக்காக, கிளாங் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நிகழ்வு நேற்று மாலை ஆன்மீக உணர்வுகளுடன் நடைபெற்றது.

Buddyz அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலை ஆர்வலர்கள், இசை ரசிகர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு, இசை காணொளியின் வெற்றிக்காக இறைவனின் அருளை வேண்டினர். ஒற்றுமை, நம்பிக்கை மற்றும் கலை வளர்ச்சியை முன்னிறுத்திய இந்த நிகழ்வு அனைவராலும் பாராட்டப்பட்டது.

“ஜொக்கோ” இசை காணொளியின் பாடலை திறமையான பாடகர் சந்தோஷ் (Santosh) பாடியுள்ளார். பாடலின் வரிகள், இசை மற்றும் இசையமைப்பை சாரா ராமன் (Sara Raman) மேற்கொண்டுள்ளார். கித்தார் இசையை பிரான்சிஸ் டோஹா (Francis Doha) வழங்கியுள்ளார்.

பாடல் பதிவு பணிகள் RK Studio-வில் நடைபெற்றதுடன், இசையின் தரத்தை மேலும் உயர்த்தும் வகையில் Music Kitchen நிறுவனம் Mix & Mastering பணிகளை மேற்கொண்டுள்ளது. விளம்பர வடிவமைப்பை ஜெய் (Jay) உருவாக்கியுள்ளார்.

இந்நிகழ்வின் போது, “ஜொக்கோ” இசை காணொளி உலகம் முழுவதும் உள்ள தமிழ் இசை ரசிகர்களின் மனதை கவரும் என்ற நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. மேலும், மலேசிய தமிழ் கலைத்துறையின் வளர்ச்சிக்கு இத்தகைய புதிய முயற்சிகள் முக்கிய பங்காற்றும் என கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.

இசை காணொளி குழுவினருக்கு MKU Malaysia Kalai Ulagam மற்றும் Naan Oru Malaysian Media ஆகியவை தங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் ஆதரவையும் தெரிவித்துள்ளன.

“ஜொக்கோ” இசை காணொளி விரைவில் வெளியிடப்படவுள்ள நிலையில், இசை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *