செலாயாங், மார்ச் 24

மலேசிய இந்து சங்கம் செலாயாங் வட்டாரப் பேரவையின் 26-ஆம் ஆண்டு பொதுக்கூட்டம், ஞாயிற்றுக்கிழமை (22.03.2026) மாலை 4 மணிக்கு பத்து கேவ்ஸ் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் மலேசிய இந்து சங்கம் சிலாங்கூர் மாநிலப் பேரவையின் தலைவர் தொண்டர்மணி திரு. அசோகன், தேசிய பேரவையின் கௌரவப் பொதுச் செயலாளர் திரு. கணாமூர்த்தி, மாநில சமயப் பகுதி பொறுப்பாளர் முனைவர் டாக்டர் விக்னேஸ்வரன், இளைஞர் பகுதி பொறுப்பாளர் திரு. ரிகேஷ், உதவித் தலைவர் திரு. சுகுமாறன், துணைப் பொருளாளர் திரு. சுப்பிரமணியம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும், பத்துமலை வட்டாரப் பேரவையின் தலைவர் திரு. நேரு, MKU கலை உலக CEO டாக்டர் எஸ்.பி. பிரபாகரன், நாகா சாய் ஆலயத் தலைவர் திரு. சுரேஷ், தேவி ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயச் செயலாளர் திரு. வீரசிங்கம், ஸ்ரீ இராமர் ஆலயச் செயலாளர் திரு. நேரு மற்றும் பல ஆலய உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
கூட்டத்தின் முக்கிய அம்சமாக, 2026-ஆம் ஆண்டிற்கான புதிய செயலவை உறுப்பினர்கள் மாநிலத் தலைவர் திரு. அசோகன் தலைமையில் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள் பட்டியல்:
தலைவர்: தொண்டர்மணி திரு. க. சோழன்
துணைத் தலைவர்: திருமதி. மோ. ஜெகதீஸ்வரி
செயலாளினி: திருமதி. மு. தெய்வானை
துணைச் செயலாளினி: குமாரி. சர்வேஸ்வரி
பொருளாளர்: திருமதி. நா. சுமதி
இளைஞர் பிரிவு: திரு. க. ரவிகுமார்
மகளிர் பிரிவு: திருமதி. மகாலெட்சுமி
சமூக நலன் பிரிவு: தொண்டர்மணி திரு. தமிழ்செல்வம்
சமயப்பிரிவு: திருமதி. மு. தனலட்சுமி
ஆலயப்பிரிவு: திருமதி. முத்துலெட்சுமி
செயலவை உறுப்பினர்கள்:
திருமதி. பரமேஸ்வரி, திருமதி. விஜயராணி, திருமதி. சந்தனமேரி, திருமதி. புஷ்பராணி, திரு. தியாகராஜன்
உட்கணக்காய்வாளர்கள்:
டாக்டர் எஸ்.பி. பிரபாகரன், திரு. லெட்சுமணன்
ஆலோசகர்:
விவேக ரத்னா திருமதி. ப. புவனேஸ்வரி
இக்கூட்டம் பெரியபுராணம் பாடல்களுடன் மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது.















