தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் 34ஆம் ஆண்டு இலக்கியப் போட்டிகள் – 2026 அறிவிப்பு

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் 34ஆம் ஆண்டு இலக்கியப் போட்டிகள் – 2026 அறிவிப்பு

தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான் ஸ்ரீ கே.ஆர். சோமா மொழி இலக்கிய அறவாரியம், ஆண்டுதோறும் நடத்தி வரும் இலக்கியப் போட்டிகள் இவ்வாண்டும் 34ஆம் ஆண்டாக நடைபெறுகின்றன. தமிழ் இலக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் நோக்கில், இப்போட்டிகள் சிறுகதை, கட்டுரை, மரபுக்கவிதை, புதுக்கவிதை மற்றும் மாணவர்களுக்கான சிறுகதை என மொத்தம் ஐந்து பிரிவுகளைக் கொண்டுள்ளது.

இந்தப் போட்டிகள் 2026 ஏப்ரல் 1 முதல் ஜூன் 30 வரை நடைபெறும். இலக்கியத் துறையில் ஆர்வமுள்ள எழுத்தாளர்கள் மற்றும் உயர் கல்வி நிலைய மாணவர்கள் கலந்து கொள்ளும் வகையில், பொதுப் பிரிவு மற்றும் மாணவர் பிரிவு என இரண்டு நிலைகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

1992ஆம் ஆண்டு தொடங்கிய இப்போட்டிகள் கடந்த 33 ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் மலேசியாவில் பல புதிய எழுத்தாளர்கள் உருவாகி, தமிழ் இலக்கிய உலகிற்கு முக்கிய பங்களிப்புகளை வழங்கியுள்ளனர்.

போட்டியின் நோக்கங்கள்

இந்த இலக்கியப் போட்டிகள் மூலம்: தமிழ்மொழி மற்றும் இலக்கியத்தின் பரிணாம வளர்ச்சியை பதிவு செய்தல் கலை, கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு கூறுகளை மேம்படுத்துதல் கல்வி, அறிவியல், வாணிகம் மற்றும் தொழில் சார்ந்த சிந்தனைகளை இலக்கியத்தின் வழி வளர்த்தல் மனிதநேயம் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை ஊக்குவித்தல்

பரிசுத்தொகைகள்

முதல் பரிசு: RM 2,500 /இரண்டாம் பரிசு: RM 1,750 /மூன்றாம் பரிசு: RM 1,250 / ஆறுதல் பரிசு (3): தலா RM 500 / முக்கிய பிரிவுகள்

பொதுப் பிரிவு: சிறுகதை/  கட்டுரை / மரபுக்கவிதை / புதுக்கவிதை

மாணவர் பிரிவு: சிறுகதை / பங்கேற்பு வழிமுறைகள்

படைப்புகள் தமிழில், இலக்கணத் தரத்துடன், சொந்தமாக உருவாக்கப்பட்டவையாக இருக்க வேண்டும். ஏற்கனவே வெளியிடப்பட்ட படைப்புகள் ஏற்கப்படமாட்டாது. அனைத்து படைப்புகளும் கணினியில் தட்டச்சு செய்யப்பட்டு அனுப்பப்பட வேண்டும்.

பொதுப் பிரிவில் பங்கேற்பவர்கள் மலேசிய குடியுரிமையுடையவர்களாக இருக்க வேண்டும். மாணவர் பிரிவில் பங்கேற்பவர்கள் உயர்கல்வி நிலையங்களில் முழுநேரமாக பயிலும் மாணவர்களாக இருக்க வேண்டும்.

அனுப்ப வேண்டிய விவரங்கள்

படைப்புகளுடன் கீழ்க்காணும் ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்:

முழுப்பெயர், புனைப்பெயர், முகவரி, தொடர்பு எண் (ஆங்கிலத்தில்)

அடையாள அட்டையின் நகல்

அண்மைய புகைப்படம்

(மாணவர்களுக்கு) கல்வி நிறுவனத்தின் உறுதிச் சான்றிதழ் கடைசி நாள்  அனைத்து படைப்புகளும் 30 ஜூன் 2026க்குள் கிடைக்குமாறு அனுப்பப்பட வேண்டும்.

முடிவு  இந்தப் போட்டிகளில் அதிகமானோர் கலந்து கொண்டு தமிழ் இலக்கிய உலகின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக இயக்குனரும், அறவாரிய செயலாளருமான டத்தோ பா. சகாதேவன் அழைப்பு விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *