
கோத்தா கினபாலு, மார்ச் 16 – Anwar Ibrahim தலைமையிலான அரசாங்கம் சபாவில் உள்ள ஐந்து பொண்டோக் மற்றும் தஹ்ஃபிஸ் கல்வி நிறுவனங்களுக்கு RM1.525 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை அறிவித்துள்ளது.
இந்த நிதி கட்டமைப்பு மேம்பாடு மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட டிஜிட்டல் கல்வியை அறிமுகப்படுத்த பயன்படுத்தப்படும் என பிரதமர் தெரிவித்தார். பாரம்பரிய இஸ்லாமிய கல்வி நிறுவனங்கள் தற்போதைய தொழில்நுட்ப முன்னேற்றங்களுடன் இணைந்து முன்னேற வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
நிதி பெறும் நிறுவனங்கள்:
சந்தகனில் உள்ள பொண்டோக் பெசன்ட்ரென் நூருல் இஹ்சான்
பொண்டோக் மிஃப்தாஹுஸ்ஸலாம்
பாபுஸ்ஸலாம் அல்-குர்ஆன் தஹ்ஃபிஸ் ஆய்வு மையம்
குடாத்தில் உள்ள பொண்டோக் அல்-ஹாசிமி
கோட்டா பெலுடில் உள்ள பாண்டோக் ஃபிய் டிஜிலாலில் குர்ஆன்
அதே நேரத்தில், இந்த மதப் பள்ளிகளின் பாரம்பரிய பாடத்திட்டத்தில் அரசு தலையிடாது என்றும், ஆனால் மாணவர்கள் மலாய் மொழி மற்றும் நாட்டின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.
மேலும், அடிப்படை வசதிகள் மற்றும் சிறிய வணிகங்களுக்கு வளர்ச்சி திட்டங்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.















