தென்கிழக்கு ஆசியாவின் மகாலட்சுமி ஆலயம் என்று புகழ்பெற்ற Perak, Slim River ஶ்ரீ மகாலட்சுமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்* மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

13 March 2026,Friday,

தென்கிழக்கு ஆசியாவின் மகாலட்சுமி ஆலயம் என்று புகழ்பெற்ற Perak, Slim River ஶ்ரீ மகாலட்சுமி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்* மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மலேசியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலிருந்தும்கிட்டத்தட்ட 6000 க்கும் மேற்பட்டோர் இந்த கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார்கள். பக்தர்களுக்கும் சிறப்பான தரிசனமும் கிடைத்தது.

மக்கள் கலைஞர், ஆன்மீகச் செம்மல் *கவிமாறன்* Ampang ஶ்ரீ ஆதிசங்கர் திரு மடத்தின் ஸ்தாபகர் *சுவாமி மகேந்திரா* Durian Tunggal ஸ்ரீ அஷ்ட தச பூஜை காளியம்மன் ஆலயத்தில் ஸ்தாபகர் *அம்மா சுவாமி சண்முகநாதன்* Kuala Selangor சக்தி புறத்தின் ஸ்தாபகர் *சுவாமி முத்துக்குமார குருக்கள்* மற்றும் மகிமா இயக்கத்தின் தலைவர் *Dato சிவக்குமார்* ,

Dato Aathy குடும்பத்தினார் மற்றும் அரசியல் பிரமுகர்களும் சுற்று வட்டார ஆலய பொறுப்பாளர்களும் கலந்து கொண்டு இந்த கும்பாபிஷேகத்தை சிறப்பு செய்தார்கள். *Tan Sri ராமசாமி* குடும்பத்தினர் அன்னதானத்தை வழங்கி சிறப்பு செய்தார்கள். *சிவ ஸ்ரீ மாறன் குருக்கள்* தலைமையில் மிகச் சிறப்பாக திருப்பணி வேலையும் கும்பாபிஷேக வேலைகளும் செம்மையாக நடைபெற்று முடிந்தது

 

ஆலய பொறுப்பாளர்கள் அனைவரும் சிறப்பாக அவர்கள் வேலையை செய்திருப்பது வரவேற்கக் கூடியது. வந்திருக்கக்கூடிய அனைவருக்கும் மகாலட்சுமி அம்மனின் நல்லாசி வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *