கோலாலம்பூரிலிருந்து பஹ்ரைன் வழி லண்டனுக்கு சிறகடிக்க ஏர் ஆசியா எக்ஸ் திட்டம் கொண்டுள்ளது. 

கோலாலம்பூர்-பஹ்ரைன்-லண்டன் விமான சேவை

பஹ்ரைன் பிப் 13

ஐரோப்பாவில் விரிவாக்க திட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய கிழக்கில் வியூகம் நிறைந்த ஒரு மையமாக உருவாக்க பஹ்ரைனை ஏர் ஆசியா எக்ஸ் தேர்வு செய்துள்ளது.

இதன் அடிப்படையில் கோலாலம்பூரிலிருந்து பஹ்ரைன் வழி லண்டனுக்கு சிறகடிக்க ஏர் ஆசியா எக்ஸ் திட்டம் கொண்டுள்ளது.

தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிற்கிடையே விமான தொடர்பை வலுப்படுத்த பஹ்ரைனை வியூகம் நிறைந்த மையமாக உருவாக்க ஏர் ஆசியா எக்ஸ் இலக்கை கொண்டுள்ளது.

விமான போக்குவரத்து கட்டமைப்பிற்கும் மற்றும் இட அமைப்பிற்கும் பஹ்ரைன் வியூகம் நிறைந்த நகராக கருதப்படுவதால் ஏர் ஆசியா எக்ஸ் இந்த முடிவை செய்துள்ளது.

இதனிடையே ஏர் ஆசியா எக்ஸின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுக்கப்பட்டுள்ள ஒரு துணிச்சலான முடிவு இது என கேப்பிட்டல் ஏ தலைமை செயல்முறை அதிகாரி டான்ஶ்ரீ டோனி பெர்னாண்டஸ் கூறினார்.

இந்த விமான நிறுவனத்துடன் இணைந்து கேப்பிட்டல் ஏ-வின் இதர நிறுவனங்களான சரக்கு செயல்பாட்டு நிறுவனம் டெலிபோர்ட் மற்றும் பராமரிப்பு, பழுது பார்ப்பு மற்றும் முற்றிலும் பழுது பார்த்தல் நிறுவனமான எம்ஆர்ஒ வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்றார் அவர்.

இப்பிராந்தியத்தில் விமான நிலையங்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்களுடன் அணுக்கமான ஒத்துழைப்பை ஏர் ஆசியா எக்ஸ் மேற்கொள்ளும் என்றார் அவர்.

தென்கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய சுற்றுப்பயணிகள் மற்றும் வர்த்தக பயணிகளுக்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு என அவர் குறிப்பிட்டார்.

இதன் வழி வர்த்தகத்துறை மற்றும் சுற்றுலாத்துறை அபரித வளர்ச்சியை காணும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இதனிடையே ‘உலகளவில் இணைக்கும் உண்மையான விமான நிறுவனம் இது’ என்பதை இந்த முன்னெடுப்பு நிரூபிப்பதாக ஏர் ஆசியா எக்ஸ் குழும நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி ஃபோ லிங்கம் கூறினார்.

கோவிட் தாக்கத்திற்கு பிறகு ஏர் ஆசியா எக்ஸ் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு துணிச்சலுடன் கால் பதித்துள்ளதாக அவர் சொன்னார்.

ஆசியான் மற்றும் ஆசியாவை உலகத்துடன் இணைக்க ஒரு முன்னெடுப்பு திட்டம் இது என்றார் அவர்.

இந்த அபரீத வளர்ச்சியின் ஒரு பகுதியாக அடுத்த ஐந்து ஆண்டுகால திட்டத்திற்கு 374 புதிய விமானங்களை வாங்க ஏர் ஆசியா எக்ஸ் முன்பதிவு செய்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.

இதனிடையே ஏர் ஆசியா எக்ஸ் உடனான இந்த கூட்டு முயற்சி பஹ்ரைன் அரசாட்சியின் பொருளாதார பங்காளிதுவத்தின் வலியை பிரதிபலிப்பாக பஹ்ரைன் அரசாட்சியின் நிதி மற்றும் தேசிய பொருளாதார அமைச்சர் எச்.இ.ஷெய்க் சல்மான் பின் கலிபா அல் கலிபா கூறினார்.

இந்த ஒத்துழைப்பின் வழி சுற்றுலாத்துறை மற்றும் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

ஏர் ஆசியா எக்ஸின் இந்த முன்னெடுப்பு இப்பிராந்தியத்தின் சுற்றுலா துறையின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *