கோலாலம்பூர், பிப்ரவரி 2026 –

இந்தியாவின் மதிப்பிற்குரிய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களை வரவேற்கும் வகையில், மலேசியாவில் பெரும் சமூக வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பிப்ரவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்த நிகழ்ச்சிக்கு, மலேசிய இந்திய சமூகத்தின் பல்வேறு அமைப்புகள் இணைந்து ஏற்பாடு செய்து வருகின்றன. இந்தியா–மலேசியா இடையிலான நட்புறவு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கலாசார உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த வரவேற்பு நிகழ்ச்சி அமைக்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் அரசியல், சமூக, தொழில் மற்றும் இளைஞர் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளதாகவும், நிகழ்ச்சி குறித்த மேலும் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.















