கோலாலம்பூர் | 23 ஜனவரி 2026

ஜனவரி 30 முதல் பிப்ரவரி 1 வரை தைப்பூசத் திருநாளின் துடிப்பான ஆன்மிக உணர்வை மலேசியர்களுக்கு நேரடியாகக் கொண்டு சேர்க்கும் வகையில், ஆஸ்ட்ரோ நிறுவனம் 3 நாள் பிரத்தியேக நேரலை ஒளிபரப்பை வழங்குகிறது. இந்த சிறப்பு ஒளிபரப்பு ஜனவரி 30 இரவு 9 மணி முதல் பிப்ரவரி 1 இரவு 11.59 மணி வரை நடைபெறும்.
பத்து மலை, ஈப்போ, ஜார்ஜ்டவுன் மற்றும் சுங்கை பெட்டானி ஆகிய பகுதிகளில் உள்ள முக்கியமான உள்ளூர் கோயில்களில் இருந்து புனிதப் பூஜைகள், விசேஷ வழிபாடுகள் மற்றும் பிரம்மாண்டமான ரத ஊர்வலங்கள் நேரலையாக ஒளிபரப்பப்படவுள்ளன. இந்த ஒளிபரப்பு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா தளங்களில் காணக்கிடைக்கும். இதனைத் தொடர்ந்து, ராகா வானொலி 24 மணி நேரமும் பக்திப் பாடல்களை ஒலிபரப்பி தைப்பூச பக்தி சூழலை மேலும் வலுப்படுத்துகிறது.
“நன்றி கந்தா” எனும் கருப்பொருளில் தயாராகும் இந்த நேரலை நிகழ்ச்சியை சோதிராஜன் பரஞ்சோதி, மீனா குமாரி கடியன்பன், அருணா ராஜ் தேவராஜு, இந்துமதி சுபர்மணியன், நதியா ஜெயபாலன், மகேந்திரன் வேலுபிள்ளை, சுரேஷ் திருஞான சம்பந்தன், விகடகவி மகேன், ஸ்ரீ குமரன் முனுசாமி, ரேவதி மாரியப்பன், குணசீலன் சிவக்குமார், கபில் கணேசன், சிவராஜ் லிங்கராஜ் மற்றும் சாந்தினி சுப்ரமணியம் உள்ளிட்ட புகழ்பெற்ற மற்றும் புதுமுகத் தொகுப்பாளர்கள் முன்னெடுக்கின்றனர். மூன்று நாள் ஒளிபரப்பின் முழுவதும் அரங்க விவாதங்கள், நேரலைத் தகவல்கள், பக்தர்களுடனான நேர்காணல்கள் மற்றும் பல கோயில்களிலிருந்து நேரடி புதுப்பிப்புகள் இடம்பெறுகின்றன.
இந்த தைப்பூச சிறப்பு ஒளிபரப்பின் கீழ் நேரலையாகக் காணக்கிடைக்கும் முக்கிய கோயில்கள்:
-
பத்து மலை ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி தேவஸ்தானம் (கோம்பாக், சிலாங்கூர்)
-
ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் (கோம்பாக், சிலாங்கூர்)
-
கல்லுமலை அருள்மிகு சுப்பிரமணியர் ஆலயம் (ஈப்போ, பேராக்)
-
அருள்மிகு பாலதண்டாயுதபாணி ஆலயம் (ஜார்ஜ்டவுன், பினாங்கு)
-
நாட்டுக்கோட்டை செட்டியார் கோவில் (ஜார்ஜ்டவுன், பினாங்கு)
-
ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி தேவஸ்தானம் ஆலயம் (சுங்கை பெட்டானி, கெடா)
மேலும், எளிதான ஸ்ட்ரீமிங் வசதியும் பல்வகை பொழுதுபோக்கு உள்ளடக்கங்களையும் வழங்கும் ஆஸ்ட்ரோ ஒன் (Astro One) தொகுப்புகள் தற்போது RM49.99* முதல் கிடைக்கின்றன. இதில் ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் astro.com.my இணையதளத்தை அணுகலாம் அல்லது 03-9543 3838 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம்.
மேலதிக தகவல்களுக்கு content.astro.com.my இணையதளத்தைப் பார்வையிடலாம்.















