சென்னை, ஜனவரி 27 :

மக்கள் நீதி மய்யம் தலைவர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் திரு. கமல்ஹாசனை, இலங்கையைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மக்கள் நீதி மய்யம் தலைமை அலுவலகத்தில் இன்று சந்தித்து கலந்துரையாடினர்.
தென்னிந்தியாவிற்கான இலங்கை துணை உயர்ஸ்தானிகர் டாக்டர் கணேஷநாதன் கீதிஸ்வரன், அவரது துணைவியார் திருமதி கிருத்திகா தேவி, இலங்கை காவல்துறையின் முன்னாள் மூத்த காவல் கண்காணிப்பாளர் (SSP) திரு. கணேஷநாதன் மற்றும் பிற பிரதிநிதிகள் அடங்கிய குழு, மரியாதை நிமித்தமாக இந்தச் சந்திப்பை மேற்கொண்டது.
இந்த சந்திப்பின் போது, இந்தியா–இலங்கை நாடுகளுக்கிடையிலான வலுவான மற்றும் நீடித்த இருதரப்பு உறவுகள் குறித்து கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. இலங்கையின் தற்போதைய அரசியல், பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிகள் குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல்ஹாசனுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதன் மூலம் இரு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர புரிதலும், ஒத்துழைப்பும், பிராந்திய உறவுகளும் மேலும் வலுப்பெற்றன.
இந்த நிகழ்வில் மக்கள் நீதி மய்யம் துணைத் தலைவர் திரு. ஏ.ஜி. மௌர்யா, ஐபிஎஸ் (ஓய்வு), பொதுச் செயலாளர் திரு. ஏ. அருணாச்சலம் மற்றும் மாநிலச் செயலாளர் (தலைமை அலுவலகம்) திரு. செந்தில் அருமுகம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பு, இந்தியா–இலங்கை உறவுகளை மேலும் ஆழப்படுத்தும் ஒரு முக்கியமான முயற்சியாக கருதப்படுகிறது.
– செய்தியாளர்
மக்கள் நீதி மய்யம், செய்தி அலுவலகம்















