2026ஆம் ஆண்டின் அயலகத் தமிழர் மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர்,
தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களையும்,

துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களையும்

அவர்களின் இல்லத்தில் தனித்தனியே சந்தித்து, தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்ட தருணம் மகிழ்ச்சி நிறைந்ததாக இருந்தது.
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மட்டுமின்றி, இந்திய அரசியலிலும் ஆழமான முத்திரை பதித்து, மறைந்த பின்னரும் வரலாறாக நிலைத்திருப்பவர் முத்தமிழ் மூதறிஞர் கலைஞர் அவர்கள்.
அவரை நேரில் சந்தித்து உரையாடியதும், வணங்கி ஆசி பெற்றதும், என் வாழ்வில் என்றென்றும் மறக்க முடியாத அனுபவமாகும்.
கலைஞர் அவர்களின் கொள்கைகளைச் சுமந்து, கட்சியையும் அரசையும் வழிநடத்தி, தொடர்ச்சியான சாதனைகளைப் படைத்து வருபவர் தமிழ்நாடு முதல்வர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள்.
அவரைச் சந்திக்கும் போதெல்லாம், முத்தமிழ் மூதறிஞர் கலைஞர் அவர்களின் நினைவுகள் உயிர்த்தெழுவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இச்சந்திப்பின்போதும் அதே உணர்வையே நான் உணர்ந்தேன்.
துணை முதல்வர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களைச் சந்தித்தபோது, அவரின் கொள்கை மாறாத செயல்பாடுகளை மனதாரப் பாராட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்தேன்.
மூன்று தலைமுறைகளாகத் தொடரும் இந்த உறவை, நான் மிகுந்த பெருமையுடனும் மரியாதையுடனும் போற்றுகிறேன் .















