பெர்சாட்டு (Bersatu) கட்சித் தலைவர் தன் ஸ்ரீ முஹ்யித்தீன் யாசின், மலேசிய இந்திய மக்கள் கட்சி (MIPP) தலைவர் புனிதன் தொடர்ந்து பெரிகாத்தான் நேஷனல் (Perikatan Nasional – PN) கூட்டணிக்குள் நீடித்து வருவதாகத் தெரிவித்தார்.

கோலாலம்பூர், ஜனவரி 22, 2026

பெர்சாட்டு (Bersatu) கட்சித் தலைவர் தன் ஸ்ரீ முஹ்யித்தீன் யாசின், மலேசிய இந்திய மக்கள் கட்சி (MIPP) தலைவர் புனிதன் தொடர்ந்து பெரிகாத்தான் நேஷனல் (Perikatan Nasional – PN) கூட்டணிக்குள் நீடித்து வருவதாகத் தெரிவித்தார்.

மேலும், அந்தக் கட்சியைச் சுற்றிய பதிவாளர் சங்கம் (Registrar of Societies – RoS) தொடர்பான பிரச்சினைகள் மற்றும் புகார்கள் அனைத்தும் தற்போது தீர்க்கப்பட்டுள்ளதாக, தமக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் அவர் கூறினார்.

நேற்று பிரிக்க்ஃபீல்ட்ஸ் அம்மான் மெஸ்ஸில் நடைபெற்ற தமிழ் ஊடகப் பணியாளர்களுடனான சந்திப்பின்போது, தன் ஸ்ரீ முஹ்யித்தீன் இந்தக் கருத்துகளைத் தெரிவித்தார்.

MIPP தொடர்பான உள்நிலை விவகாரங்கள் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்த நிலையில், தற்போது சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியான தடைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அந்தக் கட்சி PN கூட்டணியில் தனது பங்கைத் தொடர்ந்து வகிக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பெரிகாத்தான் நேஷனல் கூட்டணிக்குள் உள்ள கட்சிகளிடையே ஒற்றுமை மற்றும் புரிதல் நிலவுவதாகவும், கூட்டணியின் அரசியல் நிலைத்தன்மை உறுதியாக இருப்பதாகவும் தன் ஸ்ரீ முஹ்யித்தீன் யாசின் வலியுறுத்தினார்.

இந்த சந்திப்பு, தேசிய அரசியல் சூழல் மற்றும் கூட்டணியின் எதிர்கால திட்டங்கள் குறித்து தமிழ் ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் முக்கிய மேடையாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *