தேதி : 13 ஜனவரி 2026

ஹாரி இன்டர்நேஷனல் திறமை வெற்றியாளர்கள் சமூக அதிகாரமளிப்பு திட்டத்தின் கீழ் ஆதரவற்ற குழந்தைகளுடன் அர்த்தமுள்ள நாள்
ஹாரி இன்டர்நேஷனல் நிறுவனர் டாக்டர் பார்னி குமார் தலைமையில், Harry International Talents Winners Community Empowerment Programme (HITs) திட்டத்தின் ஒரு பகுதியாக, ஆதரவற்ற குழந்தைகளுக்கான ஒரு மனிதநேய முயற்சி சமீபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.
ஒரு எளிய திட்டமாக தொடங்கிய இந்த முயற்சி, அன்பு, மகிழ்ச்சி மற்றும் மறக்க முடியாத தருணங்களால் நிறைந்த நாளாக மாறியது. கடந்த வாரம் தொடங்கப்பட்ட HITs Executive Club அமைப்பின் நோக்கம், ஹாரி இன்டர்நேஷனல் திறமை வெற்றியாளர்களை ஒன்றிணைத்து, சமூகத்தில் தேவைப்படும் மக்களுக்கு உதவுவதாகும். அமைப்பு தொடங்கிய ஒரே வாரத்திற்குள் நிதி திரட்டப்பட்டு, திட்டம் விரைவாக செயல்படுத்தப்பட்டது. இந்த முயற்சிக்கு உற்சாகமாக செயல்பட்ட புதிய குழுவினருக்கு டாக்டர் பார்னி குமார் தனது நன்றியை தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக, Destiny Starting Point Welfare Home இல்லத்தில் வசிக்கும் குழந்தைகள், உலகப்புகழ் பெற்ற புத்தகக் கப்பலான Doulos Hope கப்பலில் ஒரு புத்தக சுற்றுலாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கப்பலைக் கண்ட குழந்தைகளின் கண்களில் தெரிந்த ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அனைவரின் மனதையும் நெகிழ வைத்தது. மேலும், குழந்தைகளின் அறிவை வளர்க்கும் நோக்கில் அந்த இல்லத்திற்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
குறுகிய காலத்திற்குள், பள்ளி திறப்பு தேவைகளுக்கான பொருட்களும், குழந்தைகளுக்கான குக்கீஸ்களும் தயார் செய்து வழங்கப்பட்டது. பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்திய தருணம், குடும்பம் போல ஒன்றிணைந்து வாழ்வதின் மகத்துவத்தை உணர்த்தியது.
இந்த நிகழ்வில் குழந்தைகளின் சிரிப்பும் மகிழ்ச்சியும், “வெற்றி என்பது தனிப்பட்ட சாதனையல்ல; பிறர் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதுதான் உண்மையான வெற்றி” என்பதைக் நினைவூட்டுவதாக இருந்தது என டாக்டர் பார்னி குமார் தெரிவித்தார்.














