சென்னை | ஜனவரி 2026

தமிழ்நாடு அரசின் சார்பில் 2026-ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்ற அயலகத் தமிழர் தினம் – உலகத் தமிழர் புலம்பெயர் கண்காட்சி நிகழ்வு, உலகத் தமிழர்களை தமிழால் இணைக்கும் இலக்கிய, வர்த்தக மற்றும் சமூக ஒருங்கிணைப்பு விழாவாக சிறப்பாக அமைந்தது.
இந்த நிகழ்வில் உலகம் முழுவதிலும் இருந்து 80-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பிரதிநிதிகள் கலந்து கொண்டு, தமிழ் புலம்பெயர் சமூகத்தின் உலகளாவிய வலிமையையும் ஒற்றுமையையும் வெளிப்படுத்தினர்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கண்காட்சியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழா, உலகத் தமிழர்களுக்கான ஒரு முக்கிய மேடையாக அமைந்தது.
இந்தக் கண்காட்சியின் முக்கிய நிகழ்வாக, சன்ஷைன் கல்வி குழுமம் தனது இந்தியக் கிளையான
சன் கிட்ஸ் இன்டர்நேஷனல் எஜுகேஷன் குரூப் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை,
மாண்புமிகு திரு. எஸ். எம். நாசர்,
தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் அயலகத் தமிழர் நலத்துறை அமைச்சர் அவர்கள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய சன்ஷைன் கல்வி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஆர். வி. ஷாம்பிரசாத் மற்றும் இணை இயக்குனர் திருமதி பரமேஸ்வரி அவர்கள்,
“இந்த தருணம் சன்ஷைன் கல்வி குழுமத்தின் உலகளாவிய கல்விப் பயணத்தில் ஒரு மைல்கல்லாகும். உலக அரங்கில் எங்கள் கல்வி சேவைகள் புதிய உயரத்தை எட்டியுள்ளன”
என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
மேலும், டாக்டர் ஆர். வி. ஷாம்பிரசாத் அவர்கள்,
“அயலகத்தில் தமிழர்களின் மேன்மை” என்ற தலைப்பில் சிறப்பு உரையாற்றி, உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் கல்வி, தொழில், கலாசாரம் மற்றும் சமூகத் துறைகளில் சாதித்து வரும் விதத்தை விரிவாக எடுத்துரைத்தார்.
இந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் உலகின் பல பகுதிகளில் இருந்து வந்த அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், வணிகர்கள், கல்வியாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நிகழ்வை மேலும் சிறப்பித்தனர்.
மொத்தத்தில், உலகத் தமிழர் புலம்பெயர் கண்காட்சி 2026, தமிழர்களின் உலகளாவிய ஒருமைப்பாட்டையும், கல்வி மற்றும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளையும் வெளிப்படுத்திய மறக்க முடியாத வரலாற்றுத் தருணமாக அமைந்தது.
newa by Veera Sinniyan















