தேதி : 12.01.2026 | சென்னை

சின்னத்திரை நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கல்
சின்னத்திரை நடிகர் சங்கத்தின் சார்பில், சங்க உறுப்பினர்களுக்கான பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் பரத் தலைமையேற்றார்.
நிகழ்வில் சங்க செயலாளர் நவீந்தர், பொருளாளர் கற்பகவல்லி மற்றும் பிற நிர்வாகிகள் முன்னிலையில், சுமார் 800-க்கும் மேற்பட்ட சங்க உறுப்பினர்களுக்கு பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன.
சங்க உறுப்பினர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய பண்டிகைகளை முன்னிட்டு இத்தகைய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்த பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி, உறுப்பினர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
சங்கத்தின் ஒற்றுமையையும், சமூக பொறுப்பையும் வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பலர் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
News by Rahul Ramesh















