நாட்டின் தொழில்சந்தை மீட்சி பாதையில் நிலைத்த வளர்ச்சியுடன் முன்னேறி வருவதை தெளிவாக நிரூபிக்கிறது என மனிதவள அமைச்சர் டத்தோக் ஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.

கோலாலம்பூர், 12 ஜனவரி 2026

நவம்பர் மாதத்தில் நாட்டின் வேலைவாய்ப்பு இல்லா விகிதம் 2.9 சதவீதமாக குறைந்துள்ளதுடன், கடந்த 11 ஆண்டுகளில் பதிவான மிகக் குறைந்த அளவாக இது அமைந்துள்ளது. இது நாட்டின் தொழில்சந்தை மீட்சி பாதையில் நிலைத்த வளர்ச்சியுடன் முன்னேறி வருவதை தெளிவாக நிரூபிக்கிறது என மனிதவள அமைச்சர் டத்தோக் ஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், இந்தச் சாதனை நாட்டின் பொருளாதாரம் மேலும் வலுவடைந்து வருவதைப் பிரதிபலிப்பதாகவும், பிரதமர் டத்தோக் ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசின் செயல்திறன் கொண்ட கொள்கைகள் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளின் விளைவாக இது சாத்தியமானதாகவும் கூறினார்.

“வேலைவாய்ப்பு இல்லா விகிதத்தின் இந்தக் குறைவு, தனியார் மற்றும் அரசுத் துறைகளில் உருவாகும் புதிய வேலைவாய்ப்புகள், திறன் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான சாதகமான சூழல் ஆகியவற்றின் நேரடி பலனாகும்,” என அவர் தெரிவித்தார்.

மேலும், மனிதவள அமைச்சகம் தொழிலாளர்களின் திறன் வளர்ச்சி, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மற்றும் உள்ளூர் தொழில்சந்தையின் போட்டித் திறனை உயர்த்தும் முயற்சிகளை தொடர்ந்து வலுப்படுத்தும் என்றும் டத்தோக் ஸ்ரீ ஆர். ரமணன் கூறினார்.

இந்த முன்னேற்றம், நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையையும் எதிர்கால வளர்ச்சிக்கான நம்பிக்கையையும் உறுதிப்படுத்துவதாக அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *