சென்னை, 10 ஜனவரி 2026:

தமிழ் புலம்பெயர் தினம் 2026 நிகழ்வை முன்னிட்டு, பினாங்கு மாநில அரசின் அதிகாரப்பூர்வ பிரதிநிதிக் குழுவை பினாங்கு மாநில செயற்குழு உறுப்பினர் டத்தோ சுந்தரராஜூ தலைமையிலே வழிநடத்தினார். இந்த தமிழ் புலம்பெயர் தினம் 2026 நிகழ்வு 11 மற்றும் 12 ஜனவரி 2025 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்மட்ட பிரதிநிதிக் குழுவில், பாகான் தாலாம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் யாங் பெர்ஹார்மத் குமாரன் கிருஷ்ணன் மற்றும் பாட்டு உபான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் யாங் பெர்ஹார்மத் குமரேசன் அருமுகம் ஆகியோரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த அதிகாரப்பூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக, 10 ஜனவரி 2026 அன்று, டத்தோ சுந்தரராஜூ அவர்கள் வட சென்னை மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீரசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இந்த சந்திப்பு, பினாங்கு மற்றும் தமிழ்நாடு இடையிலான நீண்டகால வரலாற்று, பண்பாட்டு மற்றும் மக்கள்-மக்கள் தொடர்புகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பான ஆக்கபூர்வமான மற்றும் எதிர்கால நோக்கமுடைய கலந்துரையாடல்களுக்கு சிறந்த மேடையாக அமைந்தது.
இச்சந்திப்பின்போது, இரு பகுதிகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை கல்வி, பண்பாடு, பொருளாதாரம் மற்றும் சமூக பரிமாற்றங்கள் போன்ற துறைகளில் மேலும் விரிவுபடுத்துவது குறித்த கருத்துப் பரிமாற்றங்களும் இடம்பெற்றன. இந்த சந்திப்பு, பினாங்கு–தமிழ்நாடு உறவுகளை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் ஒரு முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.















