இயக்குனர் K.பாக்யராஜ் 50 ஆண்டு சினிமா துறையில். பேனாக்கள் பேரவை சார்பில் நடந்த சந்திப்பில் பங்கேற்ற பாக்யராஜுக்கு எழுத்தாளர்

NC.மோகன்தாஸ் பாராட்டி கீரிடம் பொன்னாடை போர்த்தினார். உடன் தினமலர்தலைமை நிருபர்(ஓய் வு)நூருல்லா உள்ளார். இந்த படத்தை பார்தஉடன் 50 ஆண்டு கலைத்துறையில் கால் ஊன்ற அவருக்கு சினிமா கதாசிரியர் என்ற அடைமொழியை வழங்கியது தினகரன் நாளிதழ்தான். பத்திரிகையின் பிள்ளையார்சுழி போடுவது பேனா தான்.அந்த பேனாக்கள் பேரவை வாழ்த்துவது மிக மிக பொருத்தமானது. அதை பற்றிய என் பழைய நினைவை பதிவிட விரும்புகிறேன். 1977 ஆம் ஆண்டு தேனாம்பேட்டை அன்பகம் எதிரில் தினகரன் உதயமானது. பக்கத்து கட்டிடம் 92 C. எண் உள்ள ஒரு டீ கடை அதையொட்டி ஓடு போட்ட சிறிய வீடு அதில் பல பேச்சிலர்கள் இருந்தனர். அதில் ஒருவர்தான் சினிமா வாய்பு தேடி வந்து தங்கி இருந்த K.பாக்யராஜ். அவருடன் இருந்த வர் அழகுராஜா.நான் தினகரனிலிருந்தபோது அந்த டீ கடையில் வாடிகையாளர்.அங்கு அழகுராஜா என்னுடன் அறிமுகமாகி பாக்யராஜ் நல்ல திறமையுள்ளவர் சினிமா கதாசிரியராக வாய்ப்புக்கு முயற்சி செய்கிறார் நீங்கள் அவருக்கு பத்திரிகையாளராக தொடர்பு சினிமாவில் உள்ளதே உதவ முடியுமா? என கேட்டார். நான் தினகரன் பத்திரிகையில் ஞாயிறு பதிப்பில் ஒரு கதை எழுதி தந்தால் வெளியிட முடியும் என சொன்னதன்பேரில் பாக்யராஜ் என்னை சந்தித்து ஒரு சிறுகதைகொடுத்தார் அதை ஆசிரியர் தாமரைமணாளனிடம் கொடுத்து பிரசுரமானது. அதற்கான சன்மானம் ரூ 25. கதையின் பெயர் பரிசு…..டுமீல்…டுமில்…டுமீல். சிறுகதை. திரு.K பாக்யராஜ். சினிமா கதாசிரியர் என்று பெயரிட்டு வெளிவந்தது. பாக்யராஜிடம் பட வாய்ப்பு பெறுவதற்கு இந்த பத்திரிகையில் உங்கள் பெயருடன் இருப்பதால் நீங்கள் வாய்ப்புக்கு செல்லும் போது உதவியாக இருக்கும் என சொன்னேன்.அதன்பிறகு சில நாட்கள் பின் என்னை சந்தித்தபோது சிகப்பு ரோஜாக்கள் பட வசன குழுவில் பணிபுரிவதாக சொன்னார். இது தேனாம்பேட்டை சிக்னல் 12 B. பஸ் நிறுத்தத்தில் நடந்த சந்திப்பு. அதன்பிறகு சில மாதங்களில் புதிய வார்ப்பு பட கதாநாயகனாகி படப்பிடிப்பு நடப்பதாக அழகுராஜா என்னிடம் தெரிவித்தார். அது சரி பாக்யராஜ் எழுதிய சிறுகதையை சுறுக்கமாக நினைவுகூற விரும்புகிறேன்.அவர் ஒரு திறமைமிக்கவர் என்பதற்கு அன்றே அந்த சிறுகதைபட்டவர் தனமாக உணர்த்தியது….. கதையில் ஒரு தொழில் அதிபர் ரேஸ் பிரியர் அனைத்தையும் ரேஸ் பையத்தியத்தில் இழந்துவிடுகிறார். கடைசியாக ஆபீஸ் பையனை அழைத்து தன்னிடம் இருந்த கடைசி பணத்தை ரேஸ் போட்டியில் கட்டிவிடு நிச்சயம் நான் நம்பும் குதிரை இந்த முறை ஜெயித்து ஜாக்பாட் அடித்துவிடும் எனதருகிறார். மறுநாள் சொன்னபடி குதிரை ஜெயிக்கிறது பேப்பரில் செய்தி பார்த முதலாளி பையனை அழைத்து கத்தி அழைக்கிறார். பையன் தயங்கியடி மெதுவாக மெளனமாக வந்து நிற்ககுதிரை ஜெயித்துவிட்டது பரிசு சீட்டு எங்கே என கேட்க சார் என்னை மன்னித்துவிடுங்க இதுவும் போயிட்டா நாளை சாப்பாட்டுக்கே இல்லை என பணம் கட்டவில்லை இதோ பணம் என மேசையில் வைக்க கோபத்தின் உச்சத்தில் முதலாளி மேசை டிராயரை திறந்து துப்பாக்கி எடுத்த பையன் மீது டுமீல் டுமீல்…டுமீல் என சுடுகிறார்.அதிர்ச்சியில் கண்விழித்தபோது அது அவரது கனவு….இப்படி முடிக்கிறார்.பாக்யராஜ்…சினிமாவில் 50 ஆண்டு பணிக்காக எனது பாராட்டுக்கள். அதுவும் அவரத கலைத்துறைக்கு அடி எடுத்து வைக்க ஒரு பத்திரிகையாளரின் ஆரம்பகால உதவி நம்மால் செய்ய முடிந்தது என்பது மிகவும் மிகழ்ச்சியாக உள்ளது. என்னுடைய 50 வருட பத்திரிகை அனுபவத்தில் சினிமாவில் 50 ஆண்டு சாதனை புரிந்த ஒரு வருக்கு உதவ முடிந்தது















