வீட்டில் விழுந்ததால் துன் மகாதீர் ஐஜேஎன்னில் அனுமதிக்கப்பட்டார்

வீட்டில் விழுந்ததால் துன் மகாதீர் ஐஜேஎன்னில் அனுமதிக்கப்பட்டார்

கோலாலம்பூர், ஜன 6-

வீட்டில் விழுந்ததால் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் ஐஜேஎன்னில் அனுமதிக்கப்பட்டார்.

முன்னாள் பிரதமரான துன் டாக்டர் மகாதிர் முகமது இன்று அதிகாலை தனது இல்லத்தில் தவறி விழுந்தார்.

இதனால் அவர் தேசிய இதய நிறுவனத்தில் (ஐஜேஎன்) சிகிச்சை, கண்காணிப்பில் உள்ளார்.

டாக்டர் மகாதிர் காலை 9.30 மணியளவில் மேலதிக சிகிச்சைக்காக ஐஜேஎன்னில் அனுமதிக்கப்பட்டார்.

அவரது செய்தித் தொடர்பாளர் ஷாபி யூசாப் இதை உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில், முன்னாள் பிரதமரின் உடல்நிலை குறித்த ஊடக அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று டாக்டர் மகாதிர் அலுவலகத்தைச் சேர்ந்த ஓர் ஊடக அதிகாரி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *