TVK கொடி: ரசிகர் கைது – காணொலி வைரல்
28.12.2025

கோலாலம்பூர் புக்கிட் ஜாலில் அரங்கில் நடைபெற்ற நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, நடிகர் விஜயின் அரசியல் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சிக் கொடியை கொண்டு வந்த ரசிகர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இருக்கைகளுக்கு அருகிலுள்ள வழித்தடத்தில் அந்த ரசிகர் TVK கொடியுடன் காணப்பட்டுள்ளார். இதனை கவனித்த காவல்துறையினர், அவரை வெளியே வருமாறு அறிவுறுத்தி, அரங்கில் இருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.
27 வயதுடைய அந்த ரசிகரை காவல்துறையினர் அழைத்துச் செல்லும் தருணம் பதிவு செய்யப்பட்ட காணொலி தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.















