ஏர் ஆசியா MOVE உலகளாவிய 3 பெரிய விமான நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம்
கோலாலம்பூர் டிச 25

2025 ஆம் ஆண்டை நிறைவு செய்யும் வகையில் ஏர் ஆசியா MOVE உலகளாவிய 3 பெரிய விமான நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
ஆசியாவின் முன்னணி பயண பதிவு செயலியான ஏர் ஆசியா MOVE எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ், வியட்ஜெட் ஏர் மற்றும் கருடா இந்தோனேசியா ஆகிய விமான நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த 3 விமான நிறுவனங்களுடன் செய்து கொண்டுள்ள உடன்பாட்டின் வழி ஆசியாவின் முன்னணி பயண பதிவு செயலி என்ற ஏர் ஆசியா MOVE-ன் நிலை மேலும் வலிமை அடைந்துள்ளது.
அண்மையில் 2025 உலக பயண டெக் விருது விழாவில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆசியாவின் சிறந்த பயண பதிவு செயலி விருதை ஏர் ஆசியா MOVE வென்றது.
இந்த மூன்று புதிய விமான நிறுவனங்கள் நேரடி பங்காளிகள் என்பதால், ஏர் ஆசியா MOVE செயலியை பயன்படுத்துபவர்கள் இந்த சௌகரிய செயலியின் வழி நீண்ட பயண வழித்தடங்களுக்கான டிக்கெட்டுகளை எளிதாக கொள்முதல் செய்து கொள்ளலாம்.
இதனிடையே ‘MOVE மீது நம்பிக்கை வைத்துள்ள எங்களின் விமான நிறுவன பங்காளிகளுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்’ என MOVE தலைமை செயல்முறை அதிகாரி நாடியா ஒமர் கூறினார்.
MOVE செயலியின் வழி விமான டிக்கெட்டுகளை கொள்முதல் செய்து கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
ஏர் ஆசியா MOVE உடன் நேரடி ஒப்பந்தம் செய்து கொண்டுள்ள இதர 70 விமான நிறுவனங்கள் பட்டியலில் எத்தியோப்பியா ஏர்,வியட்ஜெட் மற்றும் கருடா இந்தோனேசியா இடம்பெற்றுள்ளதாக அவர் சுட்டி காட்டினார்.
இந்த செயலியில் பயணிகள் பல சலுகைகளை பெற முடியும் என அவர் சுட்டிக் காட்டினார்..















