செனிமான் மலேசியாவின் 24-ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் (Mesyuarat Agung Ke-24 Seniman Malaysia

19 டிசம்பர் 2025

செனிமான் மலேசியாவின் 24-ஆவது ஆண்டு பொதுக்கூட்டம் (Mesyuarat Agung Ke-24 Seniman Malaysia) இன்று ,உலூ கிளாங்F INAS அமைந்துள்ள கோம்ப்ளெக்ஸ் ஸ்டூடியோ மெர்டேகாவில் உள்ள பி. ராம்லீ மினி மேடையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த பொதுக்கூட்டத்தில் மலேசிய கலைஞர்கள், திரைப்படம் மற்றும் பொழுதுபோக்கு துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள், SENIMAN உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அமைப்பின் கடந்தகால செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் மற்றும் கலைஞர் நலன் தொடர்பான முக்கிய விவகாரங்களை விவாதித்தனர்.

கூட்டத்தின் போது SENIMAN அமைப்பின் நிர்வாக அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு, கலைத் துறையின் வளர்ச்சி, கலைஞர்களின் உரிமைகள், நலத்திட்டங்கள் மற்றும் மலேசிய திரைப்படத் துறையை மேலும் வலுப்படுத்தும் முயற்சிகள் குறித்து கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றது. மேலும், வருங்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்த 24-ஆவது பொதுக்கூட்டம், மலேசிய கலைஞர்களின் ஒற்றுமையையும் கலைத் துறையின் முன்னேற்றத்திற்கான SENIMAN அமைப்பின் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துவதாக அமைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *