ஜமுவான் இரவு உணவு & சமூக நல உதவி நிகழ்வு
செரெம்பான், டிசம்பர் 17, 2025

சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் YB பி. குணசேகரன், கம்போங் பாரு ரஹாங் கிராம மேம்பாடு மற்றும் பாதுகாப்புக் குழு (JPKK) மற்றும் அதன் செயலாளர் நியமனத்தை முன்னிட்டு, டிசம்பர் 17 ஆம் தேதி இரவு 8.00 மணிக்கு கம்போங் பாரு ரஹாங் பலாய் ராயாவில் சிறப்பு இரவு உணவு நிகழ்வை ஏற்பாடு செய்தார்.
இந்த நிகழ்வு, சமூக நலனுக்காக இடையறாது சேவை செய்து வரும் JPKK உறுப்பினர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உழைப்புக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கும் வகையில் நடத்தப்பட்டது.
நிகழ்வில் ராசா நாடாளுமன்ற உறுப்பினர் யூபி சா கீ சின், ராசா நாடாளுமன்ற JPKK பிரதிநிதிகள், செரெம்பான் மாநகர சபை (MBS) உறுப்பினர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
அதே நிகழ்வின் போது, செரெம்பான் மாவட்ட திறந்த குழந்தைகள் டைக்வாண்டோ போட்டி 2025 நிகழ்ச்சியை ஆதரிக்கும் வகையில் RM1,000 மதிப்பிலான காசோலை உதவியை யூபி பி. குணசேகரன் வழங்கினார். குழந்தைகள் ஆரோக்கியமான, ஒழுக்கமான விளையாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட ஊக்குவிப்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இறுதியாக, கம்போங் பாரு ரஹாங் சமூகத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து ஆதரவு, ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பு வழங்கி வரும் அனைத்து தரப்பினருக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் யூபி பி. குணசேகரன் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் உயர்ந்த பாராட்டையும் தெரிவித்தார்.
செய்தி: வீரா சின்னையன்















