தேதி : 17.12.2025
இடம் : சென்னை, தமிழ்நாடு


மலேசியாவின் பிரபல பாடகர் திரு. கந்திதாசன் (Mr. Ganditasan) அவர்கள் இந்தியா, தமிழ்நாடு சென்னை வருகை தந்து, சென்னை சைன் மியூசிஷியன்ஸ் யூனியன் (Cine Musician Union) ஸ்டூடியோவில் இசை சந்திப்பு மற்றும் கலந்துரையாடல் நிகழ்வில் பங்கேற்றார்.
இந்த நிகழ்வில் தமிழ் திரையிசை உலகின் குறிப்பிடத்தக்க கலைஞர்களான சபேஷ் முரளி, புல்லாங்குழல் நவீன், டிரம்மர் நாகி, தபேலா ஸ்ருதி மற்றும் செல்லா மியூசிஷியன் ஆகியோர் கலந்து கொண்டு இசை தொடர்பான விரிவான கலந்துரையாடலை நடத்தினர்.
இந்த சந்திப்பின் போது, மலேசிய இசைத்துறை மற்றும் இந்தியா – குறிப்பாக சென்னை, தமிழ்நாட்டின் இசைத் துறையின் வளர்ச்சி, வாய்ப்புகள், சவால்கள் மற்றும் எதிர்கால ஒத்துழைப்புகள் குறித்து கருத்துகள் பகிரப்பட்டன. இரு நாடுகளின் இசை கலாச்சார பரிமாற்றம் குறித்து பேசப்பட்டு, சர்வதேச அளவில் தமிழ் இசையின் வளர்ச்சிக்கு இப்படியான சந்திப்புகள் முக்கியமானவை என அனைவரும் கருத்து தெரிவித்தனர்.
இந்த நிகழ்வு இசைக் கலைஞர்கள் மத்தியில் நல்லுறவை வலுப்படுத்தியதோடு, மலேசியா–இந்தியா இசைத் துறைகளுக்கிடையிலான பாலமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.















