திருவண்ணாமலை | செய்தி அறிக்கை

திருவண்ணாமலை | செய்தி அறிக்கை

கழக இளைஞர் அணியின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளை, வார்டு, பாகம் என 1 லட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் பங்கேற்ற வடக்கு மண்டல நிர்வாகிகள் சந்திப்பு திருவண்ணாமலையில் மிகப் பிரமாண்டமாக நடைபெற்று நிறைவடைந்தது.

 

இந்த மாநாட்டில்,

🌄 “ஆதிக்கத்திற்கு அடிபணியாது தமிழ்நாடு” என்ற கருப்பொருளை விளக்கும் ‘என்றும் வெல்லும் திராவிடம்’ மேடை நாடகம் பார்வையாளர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.

🌄 சமூக வலைதளங்களின் தாக்கம் மற்றும் பொறுப்பான பயன்பாடு குறித்து சகோதரர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி சிறப்புரை ஆற்றினார்.

🌄 S.I.R தொடர்பாக கழக சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ விளக்கவுரை நிகழ்த்தினார்.

🌄 இளைஞர் அணியின் ஆக்கப்பணிகள், எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து கழக துணை பொதுச் செயலாளர் அ.ராசா விரிவாக உரையாற்றினார்.

🌄 இளைஞர் அணியின் செயல்பாடுகளைப் பாராட்டி, பணிகள் மேலும் சிறக்க வாழ்த்தி கழக பொதுச் செயலாளர் துரைமுருகன் உரையாற்றினார்.

 

இதற்கு மகுடமாக, இளைஞர் அணி தொடங்கப்பட்ட காலத்தின் அதே துடிப்பு, எழுச்சி மற்றும் உற்சாகத்துடன் கழகத் தலைவர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை, New Dravidian Stock என அழைக்கப்படும் இளைஞர் தலைமுறையிடையே பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.

 

இந்த நிர்வாகிகள் சந்திப்பு, வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் கழக வெற்றிக்கான அடித்தளத்தை வலுப்படுத்தும் வகையில் அமைந்ததாக நிர்வாகிகள் தெரிவித்தனர். தமிழ்நாட்டின் சமூகநீதி, சுயமரியாதை, திராவிட அடையாளம் ஆகியவற்றை காக்கும் அரசியல் பாதையில் உறுதியாக பயணிப்போம் என்ற தெளிவான செய்தியையும் இந்த மாநாடு எடுத்துரைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *