சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் அணையா தீபமாக ஒளியூட்டும் சொல்லின் செல்வர் இராசதுரை

“10ம் வகுப்பில் படிக்கும் போது ஒரு நூலகத்தோடு ஆரம்பித்தவர் அமைச்சரானபோது ஒரு கல்லூரியை ஆரம்பித்து இன்று பலஆயிரக்கணக்கானவர்களுடைய வாழ்க்கைக்கு ஒளியூட்டிக் கொண்டிருக்கின்றார். அவர் கூறியது போல் அவர் என்ன நோக்கத்துக்காக போராடினாரோ மக்களிடம் வாக்குக் கேட்டாரோ அந்த சொல்லில் இருந்து விலகாது மக்களை வாழவைத்துக் கொண்டிருக்கும் ஒரு ஒளி தீபமாக சுவாமி விபுலாநந்த அழகியற் கற்கைகள் நிறுவகம் உள்ளவரை அவர் வாழ்ந்து கொண்டிருப்பார்.” அரங்கம் பத்திரிகையில் இருந்து..















