போர்னியோ மண்ணில் பாஸ் கட்சியின் முதல் வெற்றித் தடம்
கோலாலம்பூர் டிச 6

அண்மையில் நடந்து முடிந்த சபா சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக ஒரு தொகுதியை கைப்பற்றி சாதனையை ஏற்படுத்தியுள்ளதாக திரெங்கானு மாநில மந்திரி பெசாரின் முஸ்லிம் அல்லாதவர்கள் விவகார பிரிவின் சிறப்பு அதிகாரி டாக்டர் பாலச்சந்திரன் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
போர்னியோ மண்ணில் பாஸ் கட்சியின் முதல் வெற்றித் தடம் இது என அவர் குறிப்பிட்டார்.
காராம்புனாய் தொகுதியில் பாஸ் கட்சியின் டத்தோ டாக்டர் அலிஅக்பாரின் வெற்றி வரலாற்று பூர்வமான ஒன்று என திரெங்கானு மாநில பாஸ் ஆதரவு பேரவையின் தலைவருமான அவர் சொன்னார்.
இந்த தொகுதியில் 371 வாக்குகள் பெரும்பான்மையில் மட்டுமே பாஸ் வேட்பாளர் வெற்றி பெற்றுள்ள போதிலும் வெற்றி.. வெற்றியே என்றார் அவர்.
சிறுபான்மை வாக்கு வித்தியாசம் என்ற போதிலும், அந்த தொகுதி மக்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளுக்கு இவர் தான் தங்களின் பிரதிநிதி என்பதை அந்த தொகுதி மக்கள் முடிவு செய்து விட்டனர் என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும் என அவர் தெரிவித்தார்.
பாஸ் கட்சியின் போராட்டம் இந்நாட்டிலுள்ள அனைத்து இனங்களுக்கும் தான் என்பதை இந்த வெற்றி உறுதிப்படுத்தி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இந்நாட்டில் இன மற்றும் மத பேதம் இன்றி அனைத்து மலேசியர்களுக்கும் பாஸ் கட்சியின் போராட்டம் தொடரும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
எதிர் வரும் 16 ஆவது பொதுத் தேர்தலில் பாஸ் கட்சி அபார வெற்றி பெறும் என அவர் குறிப்பிட்டார்.















