தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் விருந்து உபசரிப்பு – ஈப்போ 30 நவம்பர் 2025

பேராக் மாநில ம.இ.கா. ஊராட்சி உறுப்பினர் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மேற்கண்ட விருந்து நிகழ்வில் டான் ஸ்ரீ எம்.இராமசாமி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
டான் ஸ்ரீ எம். இராமசாமி அவர்கள் ஆற்றிய உரையில், இந்திய சமுதாயத்திற்கு ம.இ.கா AIMST பல்கலைக்கழகம், TAFE கல்லூரி மற்றும் MIED நிறுவனத்தின் வழி கல்வி மற்றும் தொழில்நுட்ப துறைகளில் உதவிவருவதை வலியுறுத்தினார். எனவே, அனைவரும் ஒன்றுபட்டு ம.இ.கா-வுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும், அர்ப்பணிப்புடன் கட்சிக்காகவும் சமுதாயத்திற்காகவும் உழைக்கத் தயாராக உள்ளவர்களை அடையாளம் கண்டு விரைவில் ம.இ.கா பேராக் மாநில நிர்வாகத்தில் மாற்றங்களைச் செய்யவிருப்பதாகவும் வலியுறுத்தினார்கள். மன்ற வளர்ச்சிக்கு ரிம. 3,000 நன்கொடை வழங்குவதாகவும் அறிவித்தார்கள்.
*சிறப்பு அங்கீகாரம்*: இவ்விழாவில், உலக தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் சார்பில் “பண்பாட்டு செம்மல்” விருது பெற்ற டாக்டர் டி. இராமநாயகத்திற்கு சிறப்பு மரியாதை செய்யப்பட்டது.
தொடர்ந்து அதிர்ஷ்ட குலுக்கு நிகழ்வினை டான் ஸ்ரீ எம். இராமசாமி அவர்கள் நடத்தி தந்தார்கள். பரிசுகளை வெற்றியாளர்களுக்கு எடுத்து வழங்கினார்கள். நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.















