ஜாலான் பார்லிமன், 2 டிசம்பர் 2025

பரிசோதனை அல்லது எந்தவொரு காவல்துறை சோதனையிலும் பொதுமக்கள் அமைதியாக இருந்து, தேவையான ஆவணங்களை காட்டுவது மட்டுமே செய்ய வேண்டும்; தேவையில்லாமல் வாதாடுவதை தவிர்க்கும்படி பிரிதமர் தத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
அவர் தெரிவித்ததாவது,
“சில நேரங்களில் திட்டமிட்டதாகவும் திட்டமின்றி நடைபெறும் சோதனைகளில் அதிகாரிகள் பொதுமக்களை விசாரிக்கலாம். இது பாதுகாப்புத் தேவைக்காக. சட்டத்திற்குள் நடப்பதற்காக பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்,” என்றார்.
அன்வார் மேலும் கூறுகையில்,
“நான் தனிப்பட்ட முறையில் காவலர் ஒருவரிடம் நான் ஏன் கேள்வி கேட்கக்கூடாது? என்று வாதாட மாட்டேன். நான் என் அடையாள அட்டையை காட்டுவேன்; அவர்களின் கடமை நிறைவேறட்டும். ஆனால் சிலர் சின்ன விஷயத்திலேயே பெரிய பிரச்சினையை ஏற்படுத்த முயல்கிறார்கள். இவ்வாறு நடந்துகொள்வதால் தேவையற்ற விவகாரங்கள் உருவாகின்றன,” என்று நினைவூட்டினார்.
அவர் மேலும்,
“இன்று மக்களவை கூட்டத்தில் கேள்வி பதில் நேரத்தில் இந்த விஷயம் எழுந்தபோது நான் மீண்டும் விளக்கமளித்தேன். காவல்துறையின் பணி பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வது. அதிகாரிகளும் மரியாதையுடன் நடத்த வேண்டும்; அதே நேரம் பொதுமக்களும் தேவையான மரியாதையுடன் சட்டத்துடன் ஒத்துழைக்க வேண்டும்,” எனச் சுட்டிக்காட்டினார்.
பிரதமர் கூறியதாவது,
சமீபத்தில் சமூக ஊடகங்களில் பரவிய சில வீடியோக்களில் பொதுமக்கள் மற்றும் காவலர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதங்கள் தேவையற்ற குழப்பத்தை உண்டாக்கியுள்ளன. இந்த நிலைமை மீண்டும் மீண்டும் உருவாகாமல் இருக்க அரசு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கும் என்றும் தெரிவித்தார்.















