17 ஆண்டுகள் அனுபவம் கொண்ட நிபுணர்! தேசிய, பிராந்திய விருதுகளை வென்ற பஹாங் ‘லோகா’ திருத்தும் நிபுணரின் ஊக்கமான பயணம்

பென்டோங், பஹாங் | நவம்பர் 26, 2025

17 ஆண்டுகள் அனுபவம் கொண்ட நிபுணர்! தேசிய, பிராந்திய விருதுகளை வென்ற பஹாங் ‘லோகா’ திருத்தும் நிபுணரின் ஊக்கமான பயணம்

பஹாங் மாநிலம் பென்டோங் நகரைச் சேர்ந்த 35 வயதான லோகராஜ் அந்தவன், ‘லோகா பார்பர் ஷாப்’ எனும் தனது சொந்த தொழிலை சிறப்பாக நடத்தி வருகிறார். சிறிய கிராமத்தில் ஒரு சாதாரண குடும்பத்தில் வளர்ந்த இவர், குழந்தைப்பருவத்தில் தந்தையுடன் சேர்ந்து சலூனுக்கு செல்வது வழக்கமாக இருந்தது. அப்போது திருத்துநர்கள் காட்டிய திறமையும் நுட்பமும் அவரது மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

அந்த ஈர்ப்பு தான் அவரை இந்நிலைக்கு கொண்டுவந்ததாக கூறும் லோகராஜ், “அந்தநேரமே நான் ஒரு ப்ரொஃபஷனல் தலையின்னராக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்,” என நினைவுகூர்கிறார்.

தனது கனவை நனவாக்குவதற்காக, இத்துறையில் கல்வியை மேம்படுத்தி டிப்ளொமா இன் பார்பரிங் பெற்றார். இன்று, 17 ஆண்டுகள் அனுபவம் கொண்ட நிபுணராக, திறமையை தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே வாடிக்கையாளர்களுக்கு உயர்தர சேவையை வழங்கி வருகிறார்.

தனது பணி மற்றும் அர்ப்பணிப்பிற்காக லோகராஜ் பல முக்கிய விருதுகள் மற்றும் அங்கீகாரங்களைப் பெற்றுள்ளார். அவற்றில்

Malaysia Book of Records, ,Asia Award, ,Pahang Indian Barber Club Award, Kanna Saloon Award

எனப் பல பெருமைக்குரிய விருதுகள் அடங்கும்.

இவ்விருதுகள் அவரது தொழில் வளர்ச்சிக்கு மட்டுமன்றிப், மலேசிய பார்பர் துறைக்கு அவர் செலுத்தும் பங்களிப்புக்கும் ஒரு பெரும் ஊக்கமாக அமைந்துள்ளன. “இந்த துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு இன்று வாய்ப்புகளும், வளர்ச்சியும் மிகுந்திருக்கிறது,” என அவர் கூறுகிறார்.

தனது வெற்றிப் பயணத்தில் துணைநின்ற அனைத்து அமைப்புகளுக்கும், ஆசான்களுக்கும், நண்பர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் லோகராஜ் சிறப்பு நன்றியை தெரிவித்தார். குறிப்பாக,

YP Advanced Skills, Malaysian Indian Hairstylist Empowerment Association, Pahang Indian Barber Club, Mr. Azrol Mukhtar (Lead Educator, Tuft.MY), Mrs. Wanie Husna (YP Advanced Skills), Yayasan Pahang, Royal Barbershop (Mentakab)

என பலரை நினைவுகூர்ந்தார்.

மேலும், பஹாங் மாநிலத்தின் பிரபலமான தலைவர் YAB Dato’ Sri Diraja Haji Wan Rosdy Bin Wan Ismail (Tok Wan) அவர்களுக்கு, மாநில பார்பர் சமூகத்திற்காக வழங்கப்பட்ட வாய்ப்புகளுக்கு அவர் மனமாற நன்றி தெரிவித்துள்ளார்.

இறுதியாக, தனது வாழ்க்கையில் மிகப்பெரிய சக்தியும் ஆதரவுமாக இருந்து வருபவரான திலகவதி அ/ப் ரவிக்கு “என் காதலும் என் வாழ்வும்” என அவர் அன்பும் நன்றியும் தெரிவித்தார்.

லோகராஜ் அந்தவன் வழங்கும் இந்தச் செய்தி, இளைஞர்களுக்கு ஒரு பெரிய ஊக்கமாக அமைந்துள்ளது.
அவர் போல தன்னம்பிக்கையுடன் உழைத்தால், எந்தத் துறையிலும் உயர முடியும் என்பதை நிரூபிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *