சபா மாநில தேர்தல்: முன்கூட்டியே வாக்களிப்பு காலை 8 மணிக்கு தொடங்கியது

சபா மாநில தேர்தல்: முன்கூட்டியே வாக்களிப்பு காலை 8 மணிக்கு தொடங்கியது

கோத்தா கினாபாலு, நவம்பர் 25 – 17ஆவது சபா மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான முன்கூட்டியே வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்கு மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் தொடங்கியது.

மலேசியத் தேர்தல் ஆணையம் (SPR) தெரிவித்ததாவது, இந்த முறையில் மொத்தம் 24,426 பேர் முன்கூட்டியே வாக்களிக்கின்றனர். இவர்களில் 11,697 பேர் இராணுவத்தினரும் அவர்களின் மனைவியரும், மேலும் 12,729 பேர் போலீஸ் பணியாளர்கள் மற்றும் அவர்களின் துணைவியரும் அடங்குவர்.

முன்கூட்டியே வாக்குப்பதிவிற்காக மாநிலம் முழுவதும் 58 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இவை இன்று காலை 8 மணி முதல் திறக்கப்பட்டுள்ளன என்று எஸ்பிஆர் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சபா மாநிலம் முழுவதும் இன்று நாளை முழுவதும் மழை ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. எனவே, வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்கு வரும்போது தேவையான முன்னெச்சரிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் தேர்தலில் மொத்தம் 73 சட்டமன்ற இடங்களுக்கு கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 596 வேட்பாளர்கள் மற்றும் 74 சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இது சபாவில் நடைபெற்ற பெரும் அளவிலான தேர்தல் போட்டிகளில் ஒன்றாகும்.

17ஆவது சபா மாநிலத் தேர்தல் வரும் நவம்பர் 29ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு நாளில் பாதுகாப்பும் ஒழுங்கும் உறுதி செய்யப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *