கம்புங் ஜாவா குடியிருப்பாளர்களுக்கான இடமாற்ற அவகாசம் நீட்டிப்பு கோரிக்கை

ஞாயிற்றுக்கிழமை, 9 நவம்பர் 2025

கம்புங் ஜாவா குடியிருப்பாளர்களுக்கான இடமாற்ற அவகாசம் நீட்டிப்பு கோரிக்கை

செலாங்கூர் மாநிலத்தின் செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மாண்புமிகு முதலமைச்சர் தத்தோஸ்ரீ அமிருதின் ஷாரியின் சிறப்பு சமூக உறவுகள் அதிகாரியுமான மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜார்ஜ், கம்புங் ஜாவா பகுதியில் உள்ள லாட் 11113 இடத்தை காலி செய்ய 3 நவம்பர் 2025 அன்று வழங்கப்பட்ட 7 நாட்கள் நோட்டீஸுக்குப் பிறகு நடைபெறவிருந்த இடமாற்ற நடவடிக்கைக்கு மேலதிக கால அவகாசம் கோரியுள்ளார்.

அவர் தெரிவித்ததாவது, சில குடியிருப்பாளர்கள் தற்போது மாநில அரசின் “ஸ்மார்ட் ஸீவா” (SmartSewa) எனும் வீட்டுத்திட்டத்தின் மூலம் புதிய வீடுகளுக்குப் பெயர்த்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களில் பலர் முதியவர்களும், வயதானவர்களும் ஆவார். ஆகவே, இவர்களின் வசதிக்காக மாத இறுதிவரை அவகாசம் வழங்குமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“குடியிருப்பாளர்கள் தங்கள் உடமைகள் அனைத்தையும் புதிய குடியிருப்புகளுக்குக் கொண்டு செல்ல போதிய நேரம் தேவைப்படுகின்றது. எனவே, மாண்புமிகு முதலமைச்சரின் கருணையுடன் அவகாசம் நீட்டிக்கப்படும் என நம்புகிறேன்,” என டாக்டர் குணராஜ் தெரிவித்தார்.

அதே நேரத்தில், அவர் மாநில அரசும், மாண்புமிகு முதலமைச்சர் தத்தோஸ்ரீ அமிருதின் ஷாரியும், தேவையுடைய குடிமக்களுக்கு வசதியான வீடுகளை வழங்கியதற்கும், இக்கோரிக்கையை பரிசீலித்ததற்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.மா ண்புமிகு டாக்டர் குணராஜ் ஜார்ஜ்செ ந்தோசா (N.48C) சட்டமன்ற உறுப்பினர்

மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு சமூக உறவுகள் அதிகாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *