Avision Traming Solution Sdn. Bhd நிறுவனத்தின் இணை ஏற்பாட்டில், மலேசியா சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் (KEMENTERIAN PELANCONGAN, SENI DAN BUDAYA)

 

Avision Traming Solution Sdn. Bhd நிறுவனத்தின் இணை ஏற்பாட்டில், மலேசியா சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் (KEMENTERIAN PELANCONGAN, SENI DAN BUDAYA) ஆதரவில், இந்திய கலாச்சாரத்தின் சிறப்பை வெளிப்படுத்தும் “பேஸ்டா நமஸ்தே – இந்தியக் கலாச்சாரம் மற்றும் கலை விழா” 2025 நவம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் NU Sentral, பிரிக்‌ஃபீல்ட்ஸ்,

கோலாலம்பூரில் மிகச் சிறப்பாக 
நடைபெறுகிற இந்த விழா இந்திய மரபு, இசை, நடனம், ஆடை அலங்காரம், உணவு வகைகள், கைத்தொழில் பொருட்கள் போன்ற பல்வேறு துறைகளில் இந்திய கலாச்சாரத்தின் அழகை மலேசிய மக்களிடம் அறிமுகப்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்படுகிறது.பேஸ்டா நமஸ்தே” நிகழ்வில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கலைஞர்கள் பங்கேற்று இந்திய கலை மற்றும் பண்பாட்டு பாரம்பரியத்தை உயிர்ப்பிக்கும் நிகழ்ச்சிகளை வழங்க உள்ளனர்.

இந்த விழா “ASEAN MALAYSIA 2025” விழாக்கோலத்தின் ஒரு பகுதியாக நடைபெறுகிறது.

மலேசியா மற்றும் இந்தியா நாடுகளுக்கிடையேயான கலாச்சார இணைப்பை வலுப்படுத்தும் இந்த விழா, “Malaysia Truly Asia” என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்படுகிறது.

நிகழ்வு தேதிகள்: 1 & 2 நவம்பர் 2025

இடம்: NU Sentral, Brickfields, Kuala Lumpur

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *