27 October 2025

தேசம் அனைத்துலக ஐகோன் விருது விழா தகுதியான திறனாளார்களை அடையாளம் கண்டு கௌரவிப்பதுதான் தேசம் ஊடகத்தின் முதன்மை நோக்கம்!
தேசம் ஊடகத்தின் விருதளிப்பு விழாவில் 50 பேருக்கு விருதுகள்! நவம்பர் 28ஆம் தேதி விருது விழா நடைபெறும்
தேசம் குணாளன் அறிவிப்பு
பெட்டாலிங் ஜெயா,அக்.27-
தேசம் ஊடகத்தின் 2025ஆம் ஆண்டுக்கான தேசம் அனைத்துலக ஐகோன் விருது விழா நவம்பர் 28ஆம் தேதி வெள்ளிக்கிமை இரவு 7 மணிக்கு பத்துகேவ்ஸ் Shenga Convention Hall மண்டபத்தில் மிகவும் விமரிசையாக நடைபெறவிருப்தாக தேசம் ஊடகத்தின் தோற்றுநர் குணாளன் மணியம் கூறினார்.
தேசம் ஊடகத்தின் 8ஆம் ஆண்டு திறனாளர்கள் விருதளிப்புக்கான ஏற்பாடுகள் முறையே நடைபெற்று வரும் நிலையில் விருதாளர்களை தேர்வு செய்யும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.வர்த்தகர்கள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொது திறனாளர் விருது என்று மொத்தம் 50 பேருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுவார்கள் என்று குணாளன் மணியம் தெரிவித்தார்.
தேசம் ஊடகம் கடந்த 31.8.2009இல் வார செய்தி பத்திரிகை தொடங்கப்பட்டு 2015இல் இணைய ஊடகமாக தொடங்கப்பட்ட நிலையில் தற்போது முன்னனி இணைய ஊடகங்களில் ஒன்றாக திகழ்கிறது தேசம்.
இந்நிலையில் திறனாளர்களை அடையாளம் கண்டு விருது வழங்க தேசம் ஊடகம் முடிவு செய்த நிலையில் 2010ஆம் ஆண்டில் நடைபெற்ற ஓராண்டு நிறைவு விழாவில் முதன் முறையாக 10 பேருக்கு விருது வழங்கப்பட்டது.
மலேசியாவில் திறனாளர்களை அடையாளம் கண்டு பல்வேறு துறைகளில் அங்கீகார விருதுகளை வழங்கிய முதல் ஊடக நிறுவனம் தேசம். மலேசியாவில் 2010ஆம் ஆண்டு தொடங்கி 2024ஆண்டு வரையில் சுமார் ஆயிரம் பேர் தேசம் அங்கீகார விருதுகளை பெற்றுள்ளனர்.
தேசம் ஊடகம் பல்வேறு நிலைகளில் பல்வேறு அங்கீகார விருதுகளை வழங்கி வரும் தேசம் ஊடகம் 17ஆம் ஆண்டில் தனது வெற்றிப் பயணத்தை தொடரும் நிலையில் 2025ஆம் ஆண்டுக்கான விருதளிப்பு விழாவில் 50 திறனாளர்கள் விருது வழங்கி கௌரவிக்கப்படுவார்கள் என்று குணாளன் மணியம் சொன்னார்.
தேசம் ஊடகம் பல்வேறு துறைகளில் தகுதி உள்ளவர்களை தேர்ந்தெடுத்து அவர்களை கௌரவிப்பதையே தனது முதன்மை நோக்கமாக கொண்டு செயல்படுத்தி வருகிறது. மலேசியாவில் மட்டுமன்றி கடல் கடந்து தமிழ்நாடு, சென்னை, திருவண்ணாமலை ஆகிய இடங்களில் தேசம் விருது விழாவை நடத்திய முதல் ஊடகம் தேசம் என்றால் அது மிகையில்லை என்று குணாளன் மணியம் குறிப்பிட்டார்.
இந்த விருது விழாவிற்கான தேர்வுகளை ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு தேர்வு செய்யும் நிலையில் சில விருதுகளை தேசம் குழுமம் தேர்வு செய்யும்.
இந்த தேசம் விருது விழாவில் முதன்முறையாக ‘தேசதளபதி’ விருது அறிமுகம் காணவுள்ளது. இந்த விருது தகுதியான ஒருவருக்கு வழங்கப்படும். இந்த விருதை பெறுபவர் பிரமாண்டத்தின் உச்சத்தில், மிகப்பெரிய ஒருவராக திகழ்வார். அந்த வகையில் 2025ஆம் ஆண்டுக்கான “தேசதளபதி” முக்கிய பிரமுகர் ஒருவருக்கு வழங்கப்படும் என்று குணாளன் மணியம் சொன்னார்.
இந்த விருதளிப்பு விழாவுக்கு அரசியல்வாதிகள், பி்ரமுகர்கள், ஊடகவியலாளர்கள் என்று சுமார் ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று குணாளன் மணியம் தெரிவித்தார்.
















